என்ன பதில் சொல்லப்போகிறாய்

தன ரத்தம் தந்து
உனக்கு உயிர் தந்தாள்
ஈரைந்து மாதங்கள்
தன வயிற்றில் சுமந்தாள்
கண்ணின் மணிபோல்
உன்னை பாதுகாத்தாள்
தன ஆசை துறந்து
உனது ஆசை நிறைவேற்றினாள்
தன வாழ்க்கை
நீயென நினைத்தாள்
எவளுக்காகவோ
சாகிறேன் என்கிறாயே
உன்னை பெற்றவளுக்கென்ன
பதில் சொல்லப்போகிறாய்...