நீ என் மகளாக பிறக்க வேண்டுமம்மா 555
அன்புள்ள அம்மா...
-------------உனக்காக-----------
நான் தெரிந்தோ தெரியாமலோ
செய்யும் தவறுக்கு...
என்மேல் கோபம் கொண்டு
மௌனமாய் இருந்து...
என்னை திருத்துவாய்
ஒரு தோழியாக...
என் சந்தோசத்திற்காக எதை
வேண்டுமானாலும்
விட்டு கொடுப்பாய்...
யாரால் முடியும் அம்மா
உன்னை போல்...
அண்ணன் அடித்தால் உன் மடியில்
நான் முகம் வைத்து...
அழுத நாட்களும் அப்டியே
உறங்கிய நாட்களும்...
சுகமான நினைவுகளாய்
இன்றும் இருக்குதம்மா...
உன் பேரகுழந்தைகளை நீ
கொஞ்சும் போது...
நானும் இன்று மழலையாக
என் மனம் என்னுதம்மா...
உன் அன்புக்கு
முடிவில்லை...
உன்னை பற்றி எழுதவும்
முடிவில்லை...
நீளுமம்மா உன்
அன்பை போல...
ஜென்மம் மீண்டும்
இருந்தால்...
நான் உன் மகனாக பிறக்க
வேண்டுமம்மா...
இல்லையேல் நீ என் மகளாக
பிறக்க வேண்டுமம்மா...
வரங்களை கேட்டு நிற்கிறேன்
என்னை படைத்த இறைவனிடம்...
--------------------என் அன்புள்ள அம்மா---------------------