காதல் களவு
பனங்காட்டு குருவி கூடும் பாசங்காட்டு குருவி கூடும் ஒரு மரத்தில் எதிரெதிராய் இருந்தது. பனங்காட்டு குருவிக்குஞ்சு பனத்தால் செழித்து பாசத்திற்கு ஏங்கிக்கொண்டிருந்து. பாசங்காட்டு குருவிகுஞ்சுக்கு பணபகட்டு குறைவென்றாலும் பாசத்திற்கு குறைவில்லமல் மகிழ்ச்சியுடன் வளர்ந்துவந்தது. இதைக்கண்ட பணங்காட்டு குருவிக்குஞ்சு தன்பெற்றோரை மறந்து பாசங்காட்டு குருவிகூண்டிற்கே சென்றுவிட்டது. இன்றைய சிறுவர்களும் பணத்தை மட்டுமே தேடித்தரும் பெற்றோரிடம் கிடைக்காத பாசத்திற்காக காதலெனும் பெயரால் தங்களின் குழந்தைப் பருவத்தை களவு கொடுக்கின்றனர். அன்றைய கூட்டுக்குடும்பத்தில் காதல் குறைந்திருந்ததற்கும் இன்றை தனிக்குடும்பங்களில் காதல் நிறைந்ததற்கும் சில பணம்தேடி பெற்றோரே காரணம். இன்றைய இளம் பெண்கள் சிலரும் அன்பிற்காகவே காதலெனும் பெயரில் களவு கொடுக்கின்றனர் தங்களின் இளமை பருவத்தை.