மீண்டும் வானம்பாடி

கரையான் காலடியில் பரிதவிக்கும் தாளாய்
இழந்த செதில்களில் இறக்கைகள் பூட்டி
நரகம் வியர்க்கும் நதியோரம் விக்கித்த
மொட்டைக் கனவில் மரத்துப் போனேன்

தூரத்து ஒளிக் குவியலில் கூடுகட்டி
செந்நிறத் தீப்பழச் சுளைகள் ஏந்தி
சுழன்றால் நடராச பதம் பிடிக்கும்
அபிநயக் காற்றில் பொறி தவமானேன்

அடிமைக் கதவின் துளை மறைக்கும்
குளவிக் கூடொன்றின் இறுகிய வன்ம
ரேகைகளில் சிக்குண்ட விடுதலைப் பூவை
பறித்த கற்பனையில் முதல் பலியானேன்

ஆனவரை இழந்ததில் சுகம் பிழைத்து
நிரந்தரம் வரைவதன் நிறம் குழைத்து
புதிய வானமதில் தூரிகை உயர்த்த
நான் எனதில் மீண்டும் வானம்பாடியானேன்

எழுதியவர் : புலமி (7-Jul-14, 11:37 pm)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 152

மேலே