புற்றுநோய்க்கு பாடை கட்டுவோம்

பல நொடிகள், சில விநாடிகள்
சேர்ந்ததுதான் காலம்

பல வெற்றிகள், சில தோல்விகள்
சேர்ந்ததுதான் வீரம்

பல கனவுகள், சில கற்பனைகள்
சேர்ந்ததுதான் வாழ்க்கை

பல திட்டங்கள், சில முயற்சிகள்
சேர்ந்ததுதான் திறமை

பல உறவுகள், சில பந்தங்கள்
சேர்ந்ததுதான் குடும்பம்

பல நரம்புகள், சில எலும்புகள்
சேர்ந்ததுதான் உடல்

இவை எல்லாவற்றையும் சிதைப்பது
பல சிகரெட்டுக்கள் சில பான்பராக்குகள்

ஆகவே புகையிலையை ஒழிப்போம்
புற்று நோய்க்கு பாடை கட்டுவோம்

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (9-Jul-14, 9:46 pm)
பார்வை : 301

மேலே