இந்த இயந்தர வாழ்கையில்

இன்னிக்கி நாம வாழ்ந்துட்டு இருக்குற இந்த இயந்தர வாழ்க்கைல நாம எதையும் ரசிக்கவோ, யாரை பத்தியும் யோசிக்கவோ நேரமே இருக்குறது இல்ல.. ! :-( எதையாது ஷேர் பண்ணனும்னு தோனுச்சினா ஒரு notepad, open பண்ணி அதுல இது தான் இன்னிக்கி நடந்துச்சின்னு ஒரு smiley போட்டு முடிச்சி வச்சிறோம்..! :-(
பக்கத்துல இருக்கறவன் கிட்ட பேசி மனசு விட்டு சிரிக்க யாருக்கும் நேரம் இருக்குறது இல்ல.. !!
ஆனா, சீரியல் பாத்து சிரிக்கறதுக்கு நேரம் இருக்கு.. !!! :-P
என்ன தான் facebook, whatsapp, skype, message, chat, mail ஆயிரம் technology இருந்தாலும்
நண்பர்கள் கூட அரட்டை அடிச்சி இதுக்கு மேல முடிலன்னு வயத்துல கை வச்சி, கண்ணுல கண்ணீர் வர வர, சிரிக்கிறதுக்கு எதுவுமே ஈடு ஆகாது.. !!!
தலை வலி அப்டின்னு சொல்லும் போது தலைல கை வச்சி அம்மா மாதிரி, ரொம்ப வலிக்குதான்னு தோழி கேக்குற
பாசத்தை ஒரு தலை வலி தைலம் கண்டிப்பா தர முடியாது.. !!! ;)
சில சமயங்கள் , நமக்கு ஆறுதல் சொல்ற மாதிரி ஒரு machine கண்டுபிடிச்ச என்னனு யோசிக்கும் போது தான்,
நாம பூமில தான் வாழ்ந்துட்டு இருக்கிறமானு!?? சந்தேகம் வருது.. !!! :-P
நாம வாழ்ந்துட்டு இருக்குற இந்த வாழ்க்கைல எவ்ளோ அழகான விசியங்கள் இருக்குனு கண்ணை மட்டும் திறந்து பாத்த தெரியாது..! நம்ம மனசையும் கொஞ்சம் திறந்து பாத்தா தான் தெரியும்..!! :-) :-)
நாம கடந்து போற நேரம், தெரிஞ்சவங்கள பாத்து ஒரு சின்னதா நாம சிந்துர ஒரு புன்னகை.., அவங்களோட அந்த நாளை எவ்ளோ அழகாக்கும் தெரியுமா ??
யாருக்காது பிறந்த நாள் அப்டினா.. "Happy Birthday to you" அப்டின்னு ஒரு "message" அனுப்பி விட்டுட்டு வாழ்த்து சொல்லிட்டோம் அப்டின்னு வேற வேலை பார்க்க போய்றோம்..!! அப்டி இல்லாம , "இந்த வருஷம் உனக்கு எப்டி இருக்குனு பாரு, சந்தோசமா இருக்க போறேன்னு " மனசு நிறைய சந்தோசத்தோட நேரா போய் வாழ்த்துர வாழ்த்து,
அவங்களுக்கு வருஷம் முழுசும் வரும்.. !!! :-)
இன்னிக்கி "accident" ஆகிருச்சாம்..! நேரிய பேர்க்கு அடியாம்.. ! அப்டின்னு சொல்லிட்டு அடுத்த வேலைய பார்க்க
போய்றோம்.. !! ஒரு, ஒரு நிமிஷம் அவங்களுக்கு ஏதும் ஆகிற கூடாதுன்னு ஒரு சின்ன பிராத்தனை.. !?? நம்மள எத்தனை பேர் செய்றோம்..!??
கருவறை விட்டு இறங்கி, கல்லறை நோக்கி நடந்து போறதுக்கு இடைல இருக்குற பாதைல, கொஞ்சம் அன்பு பூக்களை வாரி இறைப்போம்..! அதுல நாமளும் மென்மையா நடந்து போகலாம்.. !! கொஞ்சம் மத்தவங்களுக்கும் வழி விடலாம்.. !! விட்டு கொடுக்கிறதும், தட்டி கொடுக்கிறதும் தான் வாழ்க்கை.. !!!
இந்த மாதிரி சின்ன சின்ன விசியங்கள் செஞ்சாலே நம்ம வாழ்க்கைக்கு பாதி அர்த்தம் சேர்க்கலாம்... !!! :-) வாழ்க்கைய ரொம்ப அழகா மாத்தலாம்.. !!! :-) :-) :-)

எழுதியவர் : நிஷாந்தினி.கே (10-Jul-14, 11:21 am)
பார்வை : 177

மேலே