நபிகள் பாரதம் சார்ந்த இன்ன பிற

நபிகள்
++++++++
நபிகள் அருள் மொழி கூறிக் கொண்டிருந்தார் . கூட்டத்திலிருந்து ஒரு
வயோதிகர் எழுந்து நபிகளிடம் வந்து வாழ்க்கை குறையினை முறையிட்டுக்
கொண்டிருந்தார் . நபிகளின் அருகிலிருந்த ஒரு இளைய வயதினன் நபிகளின்
காதினில் "சாவு காத்துக் கொண்டிருக்கிறது இன்னுமா இவருக்கு வாழ்க்கைக்
குறை " என்று என்று சொன்னான்.
இளைஞன் சென்றதும் மற்றொருவரிடம் நபிகள் மெதுவாகச் சொன்னார் :
" இவன் தோளில் அமர்ந்திருக்கும் சாவை பற்றி இவனுக்குத் தெரியவில்லை .
அடுத்தவனின் சாவைப் பற்றி இவன் பேசுகிறான் "

பாரதம்
+++++++
நச்சுப் பொய்கை நீரை அருந்தி மாண்டு கிடந்தனர் பாண்டவ சகோதரர்கள் .
பதறி வந்த மூத்த சகோதரன் தருமபுத்திரனிடம் நச்சுப் பொய்கை சில
வினாக்களை எழுப்பியது . எழுப்பிய இறுதிக் கேள்வி :
"உலகின் கடைசி உண்மை என்ன ? "
" சாவு " என்று புகன்றான் புத்தியிலும் தருமத்திலும் உத்தமன் தரும புத்திரன்
உயிர் பெற்று எழுந்தனர் மாண்டு கிடந்த தம்பியர் .

நான் இறந்து விட்டால் என் இரங்கற்பாவை நீரில் எழுதி வையுங்கள் என்று
எழுதினான் ஒரு கவிஞன் .

சாவே உனக்கு ஒரு சாவு வாராதோ என்று யாரோ ஒருவர் மரணத்தின்
இரங்கலில் சொன்னான் கண்ணதாசன்.

இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லையென்று சொன்னால் விடுவானா ?
உறவைச் சொல்லி அழுவதினாலே
உயிரை மீண்டும் தருவானா ?

"காலங் காத்தால எந்திருச்சி வாழ்வைப் பத்தி சொல்லக் கூடாதா ?
இப்பிடி சாவைப் பத்தியே சொல்லுதீயளே ? "

"சாவின் சத்தியமும் தத்துவமும் தெரிந்தால்தான் வாழ்வின் அர்த்தம்
புரியும்"

" அப்பிடியா.... நாங்க என்னத கண்டோம் எழுதறிவில்லாத கை நாட்டு...
காடு வா வாங்குது வீடு போ போங்குது ..."

"என்ன கிராமசாமி என்ன அங்கலாய்ப்பு ?"

" போச்சுடா நானும் சாவப் சொல்லிப் புட்டேனா ? பாம்புச் செவி உங்களுக்கு
நீங்களே சொல்லுங்க கேக்கேன் ..போற வழிக்கு புண்ணியமா போகட்டும் "

-----சாவு தொடரும்
-----வாழ்வு மலரும்
------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-14, 9:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 133

சிறந்த கட்டுரைகள்

மேலே