தீட்சணம்
ஏன் இந்த அழுகை?
ஏன் இந்த ஆகடியம்?
ஏன் இந்த இழப்பு?
ஏன் இந்த ஈங்கிசை?
கண்ணீரை மட்டும் தன்
உடைமையாய் கொண்டுள்ள
இந்த பிஞ்சுக்கு என்ன
செய்ய போகிறோம்?
கடினம் கண்ட இந்த
பிஞ்சு உடலில்
காமம் என்னும் பெயரில்
காயத்தை பதித்தவனே..,
மனக்கோட்டம் விளைக்கும்
நீ மனிதனா?
கொடுவாள் கொண்டு
உன்னை வீசி எறிய
இதோ எம் இன பெண்கள்..,
விழித்தெழு மனிதா
விடியல் தூரம் இல்லை
விகற்பம் காணாமல்
விகாசம் காண்போம் !!!