பிப்ரவரி 28

தோழனின் தோழியாய்
உன் முகம் அறிமுகம்
சிரிப்பதாய் வேண்டாமாயென
திணறிய மனதுக்கு
என்னையும் அறியாமல்
நம் கைகள் சந்தித்தன….
சிறு பொழுது பேசிக்கொண்டன...
“ஹெலோ” என்று ஆரம்பித்த நட்பு
“ஹாய்” என்று நெருங்கியது...

உன் “எண்” என்னவென்று ? !
விணவிய மனதுக்கு
பதிலாய் செவிசாய்த்தன
உன் உதடுகள்...
அந்நிமிடம் வந்தாய் என்னுள் நீ
ஆம் !!!
அடைமொழி பெயாராய்
என் கைப்பேசியில் உன் முதலெழுத்து...

யாரென்று வினா தொடுத்த
நண்பனுக்கு,
“ஃபிரண்டு டா” என்று
மழுப்பியது கண்கள்...
எவரென புரிந்த்தாய்
சிரித்தது அவன் முகம்...

நட்பா ? காதலா ?
அதுவரை ஏதும் புரியவில்லை
உன்னிடம் பேசிய நிமிடங்கள் மட்டும்
புன்னகையாய்
உதடுகள் நிரம்பியிருந்தது மட்டும்
நித்தம் நித்தம் ஞாபகம்....

முதன் முதலில் சந்தித்த
கல்லூரி வளாகம்
அன்று மட்டும் ஏனோ
பசுமையாய் தெரிந்தன ...

கை பேசியில்
உன் பெயர் மின்னும் பொழுது
சில்லிடும் மனதுக்குள்
ஏதோ ஒரு சுகம்...

உன் கூந்தல் நீளத்தை
நீ காட்டிய பொழுது,
விலகிய வழிகளில்
உன் கை கோர்த்த பொழுது,
. . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . .
ம் ம் ம் ம் போதுமடி
வார்த்தை வற்றுகிறது....

ஒவ்வொரு மாதமும்
நாம் சந்தித்த தேதியென
28ம் நாள் என
நீ சொன்ன பொழுது,
நம் உறவு என்னவென்று
குழம்பியது நண்பன் மட்டுமல்ல
நானும் தான் !!!

“உன்னை காண வெண்டும்” என்று
நீ சொன்ன பொழுது
என்னவென்று தெறியாமல்
காணும் யாவும் உனையே போழும்
உன் திசை நோக்கி நின்றேன்...

எதையாவது மறந்தேனா
என்று விடைப்பெற்ற பொழுது
நீ வாங்கி வந்த மிட்டாய் தான் என்று
கையை நீட்டினாய்...
அன்று விட்டு சென்றது
“அதை மட்டுமல்ல
என்னையும் தான்”

எழுதியவர் : காவியன் (10-Jul-14, 10:54 pm)
பார்வை : 71

மேலே