சிகரெட்
சிகரெட் பிடிப்பது
நாகரீகம் !
அதுவும் நாலுபேர்கள்
முன்னே பிடிப்பது
ஸ்டைல் !
கோல்ட் ப்லேக்,
வில்ல்ஸ் ,
மோர்,
விதவித சிகரெட் !
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு டேஸ்ட்!
சிகரெட் பிடித்தால்
புது சிந்தனை வரும்!
டென்சன் குறைக்க
ஒரு சிகரெட் !
கலைமுதல் மாலைவரை
ஐந்து பாக்கெட்!
ஐந்து ரூபாயில் கிடைக்கும்
அற்புதம்!
ஒரு சிகரெட்டில்
உலகம் மறக்கும் !
ஒவ்வொரு உறிஞ்சலிலும்
நுரையீரல் பூரிக்கும் !
பதினாறு வயதில்
வந்த வசந்தம் !
முப்பத்திரெண்டு வயதில்
மூப்படைய வைக்கும்
அமுதம் !
முப்பத்தியாறு வயதில்
சொர்க்கம் காட்டும்
மாயாவி !
* * *
லொக்! லொக் லொக் !