பிரிவினை
காலமும் நேரமும் எதையும் பிரிக்கும்,
அது எவ்வளவு உயர்ந்ததாயினும் !
எனக்கு !
எப்போதோ உயிரை !
தற்போது உன்னை !
என்ன விழிக்கிறாய்?
சொந்தம் பந்தம் உறவு நட்பு,
அன்பு பாசம் அரவணைப்பு,
உறுதி உற்சாகம் உண்மை,
என அனைத்தும் கைவிட்டு,
துரோகம் துவேசம் துடிப்பு,
விரோதம் பகை வன்மம்,
கொடுமை குரோதம் வெறி,
என எல்லாம் சேர்ந்து ஏற்கனவே,
கொன்றுபோட்ட பிண்டமாம்,
பினத்தைத்தானே காதலித்தாய்,
சிலநாட்கள் நேரம்கடத்த நீ?
போடி போ !
நான் இறந்து நாட்களாயிற்று !!