இறை நெறி

இஸ்லாம் எங்கள்
வழியாம்.!
திருமறை எங்கள்
மொழியாம்.!
பிறறைப்பார்த்து வைப்பதில்லை
நோன்பு...!
பிறைபார்த்து வைப்பதே
எம் மார்க்கத்தின் மாண்பு...!
ஜக்காத் எங்களின்
கடமை...
ஜாதி மதம் பார்க்காமல்
கொடுப்பது எங்களின்
பெருமை...
நிலைப்பது யாராகட்டும்
மதிப்பது நாங்களே!
உண்மையை உரைப்பதும்
நாங்களே!
இருக்கும் வரை
இறையோடிருப்போம்...!
இறக்கும் வரை
உறுதியோடிருப்போம்..!
இஸ்லாம் எங்கள் மூச்சு
இன்ப ஸலாம் ..! சொல்லியாச்சு..!

எழுதியவர் : c.k.வசீம்அன்வர் (12-Jul-14, 2:49 pm)
Tanglish : irai neri
பார்வை : 683

மேலே