கற்றவை பற்றவை
கற்றவை யாவும்
மற்றவர் அறிந்திட தந்திடும்
செல்வமே கல்வி
பற்றவை உன் திறனால்
போற்றிடும் மாந்தர்
சான்றோன் எனக் கேட்டிடவே
கற்றதும் பற்றிடும் உன் திறனால்
பாட்டாளி பாமரன் பேதமின்றி
வளரும் நம்மக்கள் மேதைகளாய்
உந்திடும் உந்தன் திறமையினால்
ஊரெல்லாம் பற்றவை கல்வியை
சீருடன் நாடு செழித்திடுமே
கற்றவன் செய்த நற்செயலால்
கற்றவை பரந்து புகழ் பெறுமே
நலிந்திடக் கல்வியில் இடமேது /
கற்றவை பற்றவை வார்த்தையின்
அர்த்தம் அழுத்தம் ஆர்வம் கண்டோம்
கற்போம் கற்றுத் தருவோம் ,
கற்றுத் தெளிந்ததை
பெற்றுத்தர , பெற்றுத்தர ,
பேருவகை பொங்கிடுமே.
கல்வியில் நலிந்தோரை
நாம் காணக் கூடாது நம் நாட்டில்
சான்றோர்கள் நிறைந்திடுமே,
கற்றதும் பற்றத் தொடங்கிவிட்டால்
தொட்டவை யாவும் துலங்கிடும்
பேதங்கள் எல்லாம் அகன்றிடுமே
கற்றவை பற்றவை சேவைகள் பெருகிட
செருக்குடன் மிளிர்ந்திடும் செல்வமே
கல்வி என்று உணர்வோம் ..