கற்றவை பற்றவை
கடினப்பட்டு கற்றோம், 
 காரிருளை விற்றோம் !
காசுக்காக கல்வியை,
 கடையமைத்து விற்றோம் !
கலைமகளின் கல்வி,
 காசாகிப் போனது !
ஏழைகளுக்கு கல்வி,
 எட்டாக் கனியானது !
ஏதேதோ இலவசமாகிட,
 ஏனில்லை கல்விமட்டும் ?
இயற்றுங்கள் புதுச்சட்டம்,
 இலவசமே கல்வியென்று !
கல்வி தீபத்தை,
  காசின்றி ஏற்றிவை !
கல்லாதோரையும் கற்கவை !
 கற்றவை பற்றவை !
 
                    

 
                                