எல்லாம் வல்லோனை

வெள்ளை புறாக்கள் பறக்க விட்டு
தூது ஒண்ணு கேட்டுவிட்டு
கண்ணு மேல கண்ணு வைச்சி
கேட்டிருக்கோம் சேதி ஒண்ணு

சாலையில கதறும் மொழி
நெஞ்சிலே உயிர் வலி
போதாதோ எங்கள் ஒலி
இஸ்ரேலே ....!
கேட்காதே இன்னும் உயிர் பலி

நெத்தில ரவை பொட்டு
கைகளில் காயக்கட்டு
வெடிக்காதோ எந்தன் நெஞ்சிகூடு
இது என்ன சாபக்கேடு

பச்சிளம் குழந்தைகள் இங்கே
என்ன செய்தது அவனுக்கு அங்கே
ஏவுகணைகள் ஏவிவிட்டு
சாவு கணக்கு பார்க்கின்றான்

மானம் காக்கும் பெண்கள்
தன் பூமி காக்க வீரமாய் நிற்கையில்
மறைந்திருந்து இரவிலே
போர் தொடுக்கின்றான்

தொழுது தொழுது கேட்கிறோம்
அழுது அழுது ஏங்குகிறோம்
செத்து செத்து மடிகிறோம்
எல்லாம் வல்லோனை
எங்களை பாராயோ ....?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (13-Jul-14, 1:22 pm)
பார்வை : 166

மேலே