வாழ்வது ரசனை
![](https://eluthu.com/images/loading.gif)
வருத்தம் என்பது
வாழ்க்கையின் ஏக்கமா! இல்லை
வாழாத சோகமா! வேறென்ன
இயலாமையின் வேஷமா!
வேண்டாத விருப்பால் விளைந்து நிற்கும் மன சோகம்
வேண்டுமே வந்து போகும் மன மகிழ்வை!
தீதும் நன்றும் பிறன் தர வாரா
வந்த பின் நோவது வாழ்வதின் புதிரா!
வாழ்வதின் தத்துவம் வருவதை ஏற்பது
வாழ்ந்த பின் சாவது!
சோகமும் மகிழ்ச்சியும் சொந்தங்கொள்ளாமல்
நிகழ்ந்ததை நினைந்து வருத்தங்கொள்ளாமல்
சோத்துக்கும் சாத்துக்கும் வாழ்வு தொலைக்காமல்
ரசிக்கவே வாழ்ந்து
ரசனையாய் வாழ்வை அர்த்தங்கொள்வோம்!