கற்றவை பற்றவை - இராஜ்குமார்

இடர்பாடுகளை தகர்க்காமல்
நெருடலையே நினைத்தால்
மகிழ்ச்சி தொலைந்து
துக்கமே தோள்தரும் ..!

துக்கத்தை தூர்வாரி
எழும் எண்ணத்தில்
எழுச்சியை நிறுத்தி
வெற்றிக்கு வித்திடு ..!

தெருக்களில் தெறித்த
தோல்வியின் வலியை
வாய்ப்புகளின் வாசிப்பால்
வாழ்வினை உயர்த்திடு ..!!

கழுத்தை நெறிக்கும்
கஷ்டத்தை காலால்
மிதித்து சிதைத்து
அனுபவம் கற்றிடு .!

சரித்திரம் சற்றும்
திரும்பிப் பார்க்கா
திசைகளின் பயணத்தை
பற்றி எரியும்
பாதத்திற்கு பழக்கிடு ..!

தினசரி தேவையான
நிரந்தர முடிவுகளில்
முழுவதும் மூழ்கிய
கவலைகளை கசக்கி
கண்முன் சாகவிடு..!

இலட்சியத் தேடலை
தண்டித்த தருணங்களின்
தலைகளை சீவி
முயற்சியோடு மோதவிடு ..!


- இராஜ்குமார்

==============================================================
போட்டிக் கவிதை
தன்னம்பிக்கை கவிதை - 7
==============================================================

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (13-Jul-14, 4:12 pm)
பார்வை : 90

மேலே