எனது உயிரே வா - நாகூர் லெத்தீப்

பகலில் அவள்
தேவதை நான்
பார்க்கும் தாரகை........!
இரவில் அவளே
இராட்சசி
நான் தேடும்
புன்னகையும் கூட........!
வேகமாக
செல்லும் காற்றும்
அவளை
கண்டால்
நின்றுவிடுமே.......!
எழுத்துக்கு
தெரியாத கவிதை
அவள் தானே........!
பார்த்தாலே
அவள் மேல்
நேசம் வரும்
புதுவித காதலும்
வரும் தன்னாலே........!
இதயத்தை
உடைத்தெறியும்
மந்திரக்காரி
எனை வசியம்
செய்த தந்திரக்காரி
அவள் தானே.......!