கள்ளச் சிரிப்பாலே

கள்ளச்
சிரிப்பாலே
மெல்லச்
சிதைத்தாளே.....
சிறிய
புன்னகையில்
பெரிய
வலியை
கொடுத்தாளே......
சிரித்தாலும்
சினந்தாலும்
சிங்காரப்
பேரழகி......
முத்தம்
கேட்டால்
முரண்டு
பிடிப்பா.....கண்மூடித்
திறந்தாள்
இரண்டு
கொடுப்பா.....
தனிமையில்
தகராறு
செய்வாள்.....
சேர்ந்து
இருந்தால்
தத்துவங்கள்
தவிர்ப்பாள்......
தாயை போல
பார்ப்பா.....
நான்
சேயை
போல மாறினேன்.......
தாரமென
வந்தால்
தங்கமென
காப்பேன்......