சமாதானப் புறா

காலம் என்றால் நாளுக்கு
நாள் செல்கிறது .......
ஆனால் எங்கே ? எந்த
இடத்தில் சமாதானத்தின்
வெள்ளைப்புறா ......
முன்னொரு நாளில் ஒரு
நேரத்தில் நீ நெடுந்தூரம்
பறந்து சென்றாய் .....
நீ இன்னும் அங்கு தானா ?
நீ எங்கிருந்து மீண்டும்
பறந்து வருவாய் ........!
காலம் வந்துவிட்டது தனியாக
அல்ல சமாதானம் எனும்
இன்பத்தையும் எடுத்து வா ......