போகாதே எனை விட்டு - நாகூர் லெத்தீப்
எங்கே நீ
இருந்தாய்
பெண்ணே சொல்லடி.......!
உயிரிலே
கலந்து மனதிலே
இணைந்து
தவிக்கவிடுகிறாய்
எனை வதைக்கிறாய்........!
நீ சென்ற
பாதையை தேடுகிறேன்
நாடுகிறேன்.......!
எங்கே நீயோ
என் அன்பே
எதிர்பார்ப்புடனே
நானும் தொடர்வேனே
எனை மறந்து.........!
நினைவாலே
உனை வரித்தேன்
உணர்வாலே
உனை சமைத்தேன்.........!
உறவின்றி
உயிரானேன்
உனக்கது புரியாத
போது உயிருள்ள
ஜடமாகிறேன்........!
வலியோடு
வழி தேடி
வாழ்வாக உனை
தேடி.வருகின்றேன்
நிழலாக.........!
தொடரும்
பந்தமிது
தொலைதூரம்
போகதே எனை
விட்டு பிரியாதே..........!