கற்றவை பற்றவை

கற்றவை பற்றவை-கவிதைப் போட்டி
--------------------------------------------------------
கனவுகள் கண்டுவை
கண்களில் காதல்வை
கழிசடை தள்ளிவை
கல்வியை கற்கவை
செல்வியை சிறக்கவை
உறவுகள் சொல்லிவை
வரவுகள் உயர்த்திவை
மனிதர்கள் மதித்துவை
மதங்களை புரிந்துவை
மாற்றத்தை உணர்ந்துவை
மரணத்தை அறிந்துவை
மரங்களை விட்டுவை
செடிகளை நட்டுவை
நீரினை சேர்த்துவை
நிம்மதி தேடிவை
இயற்கையை ரசித்துவை
இதயத்தை திருத்திவை
இமைகளை காத்துவை
இம்சைகள் தவிர்த்துவை
எதிரியை அடக்கிவை
எதிர்ப்புகள் ஒடுக்கிவை
நட்புகள் பெற்றுவை
நல்லவை நடத்திவை
கோபத்தை குறைத்துவை
தீபத்தை ஏற்றிவை
நேர்மையை கண்ணில்வை
கூர்மையை சொல்லில்வை
சாதிக்க மனதுவை
சாம்பலில் உயிர்ப்புவை
கற்றவை பற்றவை

**குமரேசன் கிருஷ்ணன் **

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (14-Jul-14, 8:11 pm)
பார்வை : 140

மேலே