உன்னோடு சில நொடிகள்

******************************************************************
உன்னோடு சில நொடிகள்...!
******************************************************************



நச்சென்ற நங்குரமாய் என் நினைவு நின்றுவிட்டது
........ "நீக்க முடியா வேதனை தனிமை என்று யர்ருரைத்தது..?" என்றெண்ணி
இருவர் மட்டும் வாழும் ஓர் உலகம் சென்றுவிட்ட பின்பு,..,


சட்டென என்னில் எழுந்தது எண்ணம்
........"பெண்கள் மனதில் என்னவென்று யாரும் அறியவில்லை என்று எவர் சொன்னது..?", உரித்து நறுக்கிய வெங்காயம் போல அவன் என்
மனக்காயங்களை கண்டுணர்ந்து சொன்னதும்.,.,


கற்பனை குதிரை இன்னும் வேகமெடுக்குது,.
....... "அவன் எனை நேசிக்கிறானோ என்று எண்ணி.."
உனக்காய் நான் ஏதும் செய்வேன் என்று அவன் உரைக்கையில்.,.,

யோசனை கொஞ்சம் நீளுது,
........... " கனவு காணுங்கள் என்று அவர் எதை சொல்லியிருப்பார்..?" என்று
என் அடுத்த பிறவியில் உன் பிள்ளையாக வேண்டுமென்கையில்...

பெண்மையும் கொஞ்சம் அதை எண்ணி நாணுது ,,
.........."ஓட்டுக்குள் ஒழியும் நத்தையென "
அவன் தலை துவட்டுகையில் படும் நீர்த்துளியால்..,.,.

சிறுபிள்ளையாக மாறி ஓர் ஆட்டம் போட்டால் என்ன என்ற ஆசை
.........".மழையில் தோகை விரிக்கும் மயிலென .."
அவன் விரல் கோர்த்து` நடக்கையில்...,






ம்ம்ம்ம்ம் போதுமடி நீ கனவு கண்டது,
எழுந்து போய் வேலையை செய். எட்டு மணி பஸ்-ஐ விட்டு விடப்போகிறாய்..

அம்மாவின் அதட்டலின் என் கனவுக்காதலன்
பாவம் பயந்து "சிட்டென பறந்த பட்டம்புச்சியாய் "
எனை நழுவிஓடிவிட்டான் போலும்.,.,




-- ஜென்னி.

எழுதியவர் : ஜென்னி (15-Jul-14, 4:42 pm)
பார்வை : 118

மேலே