பூக்களோடு ஒரு கைக்குலுக்கள்

http://youtu.be/w0w0awI5g8Q
பூக்கள் சூடும் பூவையரோடு கைகுலுக்க
நீண்ட வரிசை காத்திருக்கும் என் தோழ் இளைஞர்களே
ஆங்கே குலுக்கல் முறையில்
உன் பேர் விழுந்தாலும் - பூவை
உனை விருப்பமிலாமல் தீண்டினால்
காளை உன் உள்ளம்தான் இனிக்குமோ - அவளின்
தீண்டலில் உன் ஸ்பரிசம்தான் லயிக்குமோ

வாரும் தொழர்கால்
உடலுக்குள் உயிர் உரசும் நிஜம் காண
பூக்கள் சூடும் பூவையையல்ல
பூக்களையே தீண்டலாம்

தாயின் பாசமிழந்து
தந்தையின் அறிவிழந்து
தமக்கையின் முத்தமிழந்து
தமையனின் தோழமையிழந்து

இதழ்விரித்து புன்னைகைக்க முடியா
ஏழைக் குழந்தைகளாம் இந்த
ஆதரவற்ற மொட்டுக்கள் -உம்
கரம் தீண்டினால் பூக்களாய் விரிந்து மணம்வீச
காத்துக்கிடக்கின்றன இப் பூமி எனும் பூச்சோலையில்

குலுக்கித்தான் பாருங்களேன்
நீண்ட உம் வாழ்வில் நிம்மதி கிட்டாதோ
உம்மோடு கைக்குலுக்க ஓராயிரம் பூக்கள் சூடும்
பூவையர் நீண்ட வரிசையில் இடம்பிடிப்பரே
உம் உள்ளம்தான் இனிக்காதோ ?
உம் ஸ்பரிசம்தான் லயிக்கதோ ?

வாரிரோ ! பூக்களோடு ஒரு கைக்குலுக்க

எழுதியவர் : கோ. தினகரன் (15-Jul-14, 4:50 pm)
பார்வை : 90

மேலே