விரல் சாவி
அணுச்சிதறி ஆழி திமிரவில்லை
ஆணிவேர் சிதறவில்லை
கேடயம் வான் பிளக்கவில்லை
கூர்கத்திகள் கற்குடல் கிழிக்கவில்லை
கூர்நகம் குருதி சாயம் பூசவில்லை
கவண்சுழற்றல் காவு வாங்கவில்லை
நெருப்பின் கண்களில் நீர் திரளவில்லை
ஐம்பூத வாழ்க்கைக்கு
வழக்காட வானவர் வந்தும்
ஒற்றை "எத்தன்(ஐ)"
விட்டு வைக்க மனமில்லை
விசாரணை கூண்டிலே
வார்த்தைகள் விளையாடி கொண்டிருக்கையில்
மனவெளியில் ஓர் அசரிரீ அழுகிறது
"காதலியின் விரல் இடுக்குகளில்
தஞ்சமடைய
காற்றோடு போர் தொடுக்கிறேன்..
என் விரல் அகதிகளுக்காக"