பூ மகளே உனக்காக
எந்த பூவிலும் இல்லா புதுவாசம் என் பூமகள்
நட்சத்திர கூட்டமும் இணையில்லா பொழிற் முகம்
அன்னையின் அன்பும் தோற்கும் அவளிடம்................
நான் உரு கொடுத்த என் உயிர் அவள்
என் இதய அறைகளை ஆக்கிரமிப்பு செய்பவள்
என் வாழ்வின் உந்து சக்தி
மெய் அன்பின் அகங்காரி .........
பாசம் ,எதிர்பார்ப்பாய் -எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்
மாறும் உலகியல் விதியில் தனிவிதி படைத்தாய்
பாசம் பலமடங்கு பெருக்கி உயிர் மூச்சினை அடைத்தாய்
உனக்கு நான் அம்மாவா?
எனக்கு நீ அம்மாவா?
அடிக்கடி பொய்கோபத்தில் கேட்டதுண்டு............
அது என் குழப்பத்தின் உளறல் அடி
என் தாயடி நீ............................
ஆறுதல் தேடி அடைக்கலம் ஆகும் உன்மடி
நான் உனக்கு என்றும் அடிமை அடி............
உன் வகுப்பறை முதல்வாசம்
முந்திக்கொண்டு வந்த என் அழுகை
ஆசிரியர் பெயர் கேட்க
பிரசவிக்க திணறி மரணித்த வார்த்தைகளால்
ஒரு சொல் எடுக்க ,கண்ணீர் முந்துமோ?
பயத்துடன் சொல்லாமலே வீடு வந்தேன்.................
எனது இரண்டாம் பிரசவம்....................
மயக்க மருந்து உடல் வியாபிக்க
உணர்வுகள் அனைத்தும் வேலைநிறுத்தம் செய்ய,
அறுவை சிகிச்சை நடக்க
கனவாய் ஒரு உணர்வு -அதில்
என் அழகியின் ஆக்கிரமிப்பு
உண்மைதானடி................
என் அடிமனதின் ஆழத்தில்
மொத்தமும் நீ தானடி............
பிரசவ வலியை விட பெருவலி பெற்றேன்
உன் முதல் பிரிவில் நானடி................
இன்றும் என் பிரசவ நாளோ?.................
ஒரு சிறு பிரிவும் வாட்டுமோ?
கைஅசைத்து செல்லும் போது
நீ கொடுத்த முத்தங்கள்.............
அறிவேன் என் புடம் போட்ட தங்கமே !
அது உனக்கான ஆறுதல் அல்ல.................
எனக்கான தேற்றுதல் என்று ............
I LOVE U MY DEAR YAZHINI
MISS U