கோரிக்கை

பத்துமாதம் பத்தியமாய்
பரணியில் பரிதவித்து
பார்கடலின் முத்தைப் போல்
மலைமகள் முகம் கண்டு
பரவசமாய்!! அவள்,
முத்து நடைக் கண்டு
முத்தமிழ் கற்க….கலைமகளாக
முறையாய் மொழிந்து!!
செல்வச் சிரிப்பினில்
அலைமகளாய்……… அவைதனில்
அரங்கேற்றம் காண
நித்தம் நொடிகளாய்
கரைந்தோடி!!!
அன்னைகளின் கனவுகளையும்
கற்பனைகளாய் தகர்த்தெறிந்த
நயவஞ்சக நரியே…..
சாகசம் செய்துவிட்டோம் இந்த
சபைதனில் என்று சஞ்சரிக்கும்
சாக்கடை ஜந்துவே….
உன்னை அவைதனில்
அர்ப்பணித்தவளும் – உன்
சாக்கடை நாற்றத்தையும்
பொறுத்தருளும் பூமித்தாயும்
பெண்களே…….

அவர்களைப் போற்ற வேண்டாம்
பொறுக்கித் தள்ளாமல் இரு!!
பொறுமைக்கும் எல்லை உண்டு
பொங்கி எழுந்தால் பூதேவியும்
காளியாய் களமிறங்குவாள்!!!

காமக்கொடூரனே!! உன் கண்களில்
எஞ்சியுள்ள காமத்தை அவிழ்த்தெறி…
நயவஞ்சக நரகத்திலிருந்து
மோட்சம் காண்க!! இனியும்
பாலைவனக் கிளிகளாய்
பயந்து பறக்க இயலாது!!
பாவிகளை படையெடுப்போம்!!!
பரவசம் காண்போம்!!!!!

எழுதியவர் : kavithaalaya (19-Jul-14, 2:42 pm)
சேர்த்தது : kavithaalaya
பார்வை : 70

மேலே