ஒன்றிற்கு ஓன்று

ஆன்மீகம் என்பது ஞானியில்
ஆதாரம் என்பது சாட்சியில்
ஆளுமை என்பது கரங்களில்
ஆற்றல் என்பது முயற்சியில்

உட்பொருள் என்பது அர்த்தம்
உடைமை என்பது சொந்தம்
உவமை என்பது விளக்கம்
உவகை என்பது சந்தோசம்

காணல் என்பது கிடைப்பது
கானல் என்பது ஏமாற்றம்
காவி என்பது துறவி
காக்கும் என்பது கோட்டை

தெரிவு என்பது தேர்வில்
தெளிவு என்பது கலக்கத்தில்
தென்பு என்பது தயக்கத்தில்
தென்றல் என்பது வருடலில்

மாய்தல் என்பது அழிதல்
மருளல் என்பது மயங்குதல்
மசிதல் என்பது இணங்குதல்
மாறுதல் என்பது வேறுபடல்

உயிர்ப்பு என்பது எழுச்சி
உன்னதம் என்பது உயர்வு
உணர்வு என்பது ஊட்டம்
உறுதி என்பது உத்தரவாதம்

எழுதியவர் : பாத்திமா மலர் (20-Jul-14, 10:38 am)
பார்வை : 85

மேலே