தமிழின் சிறப்பு

இந்திய திருநாட்டின்
எண்ணற்ற மொழிகளில்
வடமொழி தமிழ் தவிர
பிறமொழிகள் அனைத்துமே
தனித்தியங்கும் திறனற்ற
தொக்கி நிற்கும் மொழிகளே!

கடன் பெற்ற சொற்களை
உதறித் தள்ளீவிட்டால்
(பெபெ பெப்பபே
பெப்பபே பேபே)
எலும்புக் கூடுகளாய்
எழில் குன்றி சிதைவடையும்.

திராவிட மொழிகளின்
தாயாக இருக்கின்ற
தமிழை ஒதுக்கிவிட்டு
வாக்கியம் ஒன்றையுமே
அமைத்திட முடியாது
தெலுங்கு கன்னட
மலையாள மொழிகளில்.

செம்மொழிகள் இரண்டுண்டு
சீர்மிகுநம் தாய் நாட்டில்.

மக்கள் பயன்பாட்டில்
மேலோங்கி நிற்பது
சீரிளமை குன்றாத
செம்மொழி நந்தமிழே!

வடமொழியின் வளமை
போற்றுதற் குரியதென்றாலும்
மக்கள் பயன்பாட்டில்
குறுகிய வட்டத்திற்குள்*:
சடங்குகளில் வழிபாட்டில்
வகுப்பறையில் மட்டுமே.





* வடமொழி அருமையான செம்மொழிகளில் ஒன்று என்றாலும் அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவு. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிறுகிராமத்தில் உள்ளவர்கள் மட்டும் அம்மொழியைப் பேச்சு வழக்கில் பயன்படுத்துவதாக தொலைக் காட்சி செய்தியில் காட்டினார்கள்.

எழுதியவர் : (21-Jul-14, 9:49 am)
Tanglish : thamizhin sirappu
பார்வை : 2284

மேலே