காதல் என்பதே கடவுள்

காதல் தானே கடவுள்!.

புரிந்து கொண்டால் போதும் கொஞ்சம்.-காதல்
அறிந்து கண்டால் ஆறும் நெஞ்சம்—மடி
விரிந்து தந்தால் ஆவேன் தஞ்சம்-மனம்
தெரிந்து வந்தால் தீரும் பஞ்சம்..

கலந்து விட்டால் வானம் பக்கம்—இணை
மணந்து தொட்டால் காலம் சொர்க்கம்—அன்பு
மலர்ந்து பூத்தால் நாளும் இனிக்கும்—துணை
நினைந்து காத்தால் தோளும் துடிக்கும்.

உள்ளம் வென்ற காதல் உண்மை—உடல்
கள்ளம் தின்ற காமம் வன்மை—ஒரு
இல்லம் என்ற இதய சங்கமம்—உயிர்
துள்ளும் அந்த உலக சம்மந்தம்.

காதல் தானே கடவுள் என்பதும்—அதன்
காட்சி தானே உலகம் என்பதும்—கொடுஞ்
சாதல் தானே செத்து வீழ்வதும்—நிலை
காதல் தானே நின்று வாழ்வதும்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (21-Jul-14, 9:46 am)
பார்வை : 295

மேலே