மறவாதே நீ

ஒவ்வொரு துளி
வியர்வையின் உள்ளே
ஒரு வெற்றியையேனும் ,
வைத்துக் கொண்டேதான் சொட்டுகிறது;
மறவாதே நீ…..

உழைப்பதென்று உறுதிபூண்டால்
எங்கிருந்தோ நீளும் கைகளில்,
வெற்றிக்கான வழி இருக்கிறது;
மறவாதே நீ…..

நீ ருசித்த வெற்றிப்பழத்தில்
அடுத்தவருக்கான வாய்ப்புவிதை
ஒளிந்தே இருக்கிறது;
மறவாதே நீ….

எழுதியவர் : பசப்பி (21-Jul-14, 10:17 am)
Tanglish : maravaathe nee
பார்வை : 108

மேலே