நித்தியானந்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
“நாங்கள் வென்றால்
’எல்லாமே இலவசம்
வீடுதேடி வரும்”என்று
அறிவிப்பு செய்துவிட்டு
தேர்தலில் நின்றால்
பிறகட்சி வேட்பாளர்களுக்கு
ஒருஇடமும் கிடைக்காது.
வென்ற பின்னே
சொன்னதை நிறைவேற்றினால்
எந்தப் பிரச்சனயும்
எவருக்கும் இருக்காது.
எல்லா நேரமும்
மகிழ்ச்சி மட்டும் தருவதற்கு
மலிவான பொழுது போக்கிகள்!
அதற்குமேல் வேறென்ன
வேண்டுவர் எம்மக்கள்?
பூலோக சொர்க்கத்தில்
இன்ப வாழ்க்கை நிறைந்த
இந்திர லோகமன்றோ
நமக்காகப் பிறக்கும்.
உழைப்பில்லா வாழ்க்கை
சிந்திக்கத் தேவையில்லை
வெற்றி தோல்வியில்லை
வேண்டியது கிடைக்கும்
அலைபேசி அழைப்பொன்றாலே.
இதுவும் நடக்கும்
எதுவும் நடக்கும்
ஆவலுடன் காத்திருங்கள்
நித்திய ஆனந்தத்திற்கு.