விழிகள் வழிகிறது வருத்தத்தால்

தேய்ந்த தேகத்தின் நிலை பாரீர்
வேய்ந்த எலும்பு கூடாய் உடலும்
தோய்ந்த கவலையில் முகமும் !
ஏனிந்த நிலையோ இத்தாய்க்கும்
ஏங்கிய பார்வையுடன் விழிகளும்
ஏறிட்டு நோக்குவதும் ஏன்தானோ !
தள்ளாத வயதிலும் தளரா மனதுடன்
தள்ளுகிறார் காலத்தை தரணியிலே
தளர்ந்திட்ட மேனியுடன் வாழ்க்கையிலே !
கைப்பிடித்தவனும் காற்றில் கலந்திட
கைம்பெண் நிலையும் அமைந்திடவே
சுயதொழில் செய்திடும் நிலையன்றோ !
மக்கள் இருந்தும்உனை மறந்தனரோ
மண்ணில் உன்னையும் துறந்தனரோ
தவிக்கவிட்டு உன்னை பறந்தனரோ !
நாளிதழில் கண்டேன் இதனையும்
காணும் காட்சிதான் நானிலத்தில்
விழிகள் வழிகிறது வருத்தத்தால் !
( படம் -தினமலர் )
பழனி குமார்