பெண்- ஒரு, பெயர் அல்ல

~*உலகம் பெண்ணை (என்னை) நடத்தும் முறை பற்றிய கவிதை*~

சத்தமாக சிரித்தால், மரியாதை தெரியாதவள்
எதிர்த்து பேசினால், திமிர் பிடித்தவள்
சினம் கொண்டால், மென்மை அற்றவள்
மௌனமாய் இருந்தால், குழப்பம் நிறைந்தவள்
சுருக்கி பேசினால், தலை கணம் கொண்டவள்
வெளிப்படையாய் பேசினால், வெகுளியானவள்
நவீன ஆடைகள் உடுத்தினால், பாரம்பரியம் தெரியாதவள்
பிடித்த அணிகலன் வாங்கினால், சிக்கனம் இல்லாதவள்
நிமிர்ந்து நடந்தால், அகங்காரம் உடையவள்
துள்ளி திரிந்தேன், உலகம் வேலி போட்டது
சுய சிந்தனையை இழந்தேன், இவளே பெண்மை உடையவள் என்றது.

~*உலகம் முன்னேறியும், ஆதிக்கம் குறையவில்லை*~

எழுதியவர் : (23-Jul-14, 3:43 pm)
சேர்த்தது : vaishuvee
பார்வை : 727

மேலே