என் அண்ணன்

நானும் என் அண்ணனும் பிறப்பிலிருந்தே சண்டை இட்டதில்லை ,இது ஒன்னும் பெருமைக்காக கூறவில்லை இது உண்மை தான் . நான் இதுவரை கூட என் அண்ணனின் பெயர் அல்லதோ வாடா போடா என்றும் கூப்பிட்டதில்லை அண்ணா வா நா ,போ நா என்று தான் இதுவரை அழைத்திருக்கிறேன் .இது என்னக்கே பெருமையாக இருக்கிறது .ஏனென்றால் இந்த நாள் வரை நானும் என் அண்ணனும் ஒரு மாதம் கூட முழுமையாக ஒன்றாக சேர்ந்ததே இல்லை ,ஏனென்றால் நான் சிறு வயதிலேயே (6த் படிக்கும் போது )விடுதியில் இருந்து படித்தேன், பிறகு 10ஆம் வகுப்பு முடிந்ததும் விட்டில் இருந்து படிக்க வந்தேன், அந்த வருடத்தில் இருந்து அவன் காலேஜ் விடுதிக்கு சென்றான் அதனால் ஒரு மாதம் கூட சேர்ந்தது கிடையாது .இப்பொழுது நான் 12 படிக்கிறேன் அவன் காலேஜ் இறுதி ஆண்டு படிக்கிறான் ,இப்பொழுது அவன் முடித்து வீட்டிற்கு வரும் போது நான் காலேஜ் போகும் நிலை இப்படி யாருக்கும் இந்த மாதிரி வர கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.


இதை உண்மை என்று நம்பினால் நம்புங்கள் , நம்பினால் கருத்து கூற வேண்டும்

எழுதியவர் : ஜிதேன் கிஷோரே (25-Jul-14, 7:33 pm)
Tanglish : en annan
பார்வை : 563

மேலே