அம்சேவணி

18+

♥அம்சவேணி♥

சுமார் ஏழு வருடங்கள் கழித்துவெளி நாடு
சென்று சென்னை வந்தடைந்தேன்.திருமணம் இன்னும் ஆகவில்லை,
ஏங்கிக் கிடந்தேன்ஏதோவொரு
ஏவாளை மணமுடிக்க.
அன்று அதிகாலை எழுந்து,முகசவரம் செய்து,
தலைகுளித்து,
வாசனை சென்ட் அடித்து,தலைமுடிபடியவாரி,
நல்லதுணி அணிந்து,
பல நாள் கணவை
நிறைவேற்ற
கிளம்பிவிட்டேன்.
யாரிடமும்
சொல்லவில்லை.தெரிந்தவர்களிடம் இடம் கேட்டுபைக்கில்
கிளம்பிவிட்டேன்.
அந்த இடம் வந்து, எந்த சந்தென்றுஒரு குழப்பம், கேட்பதற்கும்ஒருகூச்சம்.ஒருவழியாக சரியான சந்துகண்டு நுழைந்தேன்.தேர்கூட்டம், பையிலோ
ஐந்நூறு் ரூபாய் மட்டுமே.ஒருவன் அருகில் வந்தான்,
வந்து முன்னூறுஎன்றான்.
பேரம் பேசினேன், போலீஸ்தொல்லை அதிகம்,
அதே ரேட்என்றான். தட்டிகளிக்கவில்லை
கொடுத்துவிட்டேன் கேட்டபணத்தை.
காதில் ஒருவன்வண்டியை வெளியேநிறுத்தென்றான்.நிறுத்திவிட்டு வழி தேடிதொடர்ந்தேன்.
ஏதோஒரு படபடப்பு, வெயிலால்வேர்தஉடம்போடு உள்ளே சென்றேன்.
செய்வது சரியா?, தவறா?,அவசியமா?எதுவுமே யோசிக்கமுடியவில்லை.
நேரமாக, நேரமாக உடல் உஷ்ணம்உலுக்கி எடுத்தது.மேலும், கீழுமாக பார்த்த ஒருவன்உள்ளே
செல் என்றான்.கழுத்து சங்கிலியை காலரில்சொருகி உள்ளே நடந்தேன்.கும்மிருட்டு,ஒன்றுமே தெரியவில்லை,கிடைத்த இடத்தில்
அமர்ந்தேன்.எப்படியிருக்கும் இந்த அனுபவம்?
சிந்திக்க முடியவில்லை.
ஏசி காற்று சில்லென்று அடித்தும்,வியர்வை நின்றபாடில்லை.
சிறிது நேரம் கழித்து, யாரோஅமர்ந்தார் அருகில்,உற்றுபார்த்தேன்,ஒரு பெண்.
வயது கணிக்கமுடியவில்லை.ஆனால் மல்லிகை
மணம்மூக்கை ஊடுருவியது.சிலநொடிகளில்இன்னொரு பெண்இடப்பக்கம்.இருட்டு இன்னும் அதிகரித்தது.ஜனநடமாடும் சத்தம் ஓயவில்லை.பின்பு மயான அமைதி.என் ரத்த ஓட்டம்்
ராக்கெட் போல்
உச்சம்தொட்டது.கால்களோ நிற்காமல்நடனமாடியது,பரவசத்தில்.சுகதாரமின்மை உடலை பதம்பார்க்குமோ
என்று அச்சம் வேறு.அனுபவித்தே ஆகவேண்டுமென்றுஆர்வம் வேறு. எப்போதும்போல்்
ஆர்வமே ஜெயித்தது.இபோது என் எதிரில்விளக்கணிந்த
சுருங்கியசிகப்பு துணியை பார்க்கமுடிகிறது.அருகில் இருந்தவள் கை லேசாகபட்டதுஎத்தேசையாக.திரை மெல்ல மெல்லவிலகுகிறது.
நடுக்கமோ நாடு கடத்தியது.
மனதுக்குள் மணி அடித்தது.
பிறகு வெண் திரை கண்டேன்,
அதில் பூட்ஸ் கால்பார்த்து பூரித்தேன்.பலாயிரம் பட்டாம்பூச்சிகள்மேல்்
நோக்கிபறக்கக் கண்டேன்.
காதை கிழிக்கும் கரகோஷமோ?
கணிக்கவில்லை.
ஸ்லொவ் மோசனில் முழங்கால்தரிசித்து,
இடுப்பு பார்த்து,
கழுத்து கண்டு, தலைதூக்கிமுகதரிசனம் செய்யநினைக்கும்போது....‪‎ஹலோ‬பாஸ்!
கொஞ்சம் தணிஞ்சு‎
உட்காருங்கோன்னு‬
ஒருகோரிக்கை
கோபத்தை‬அடக்கிக்கொண்டு,விரல் வைத்து,
நாக்கு மடித்து,
விசில்‬அடித்து
பார்த்தேன்

்துப்பாக்கி,
முதல் நாள்,
முதல் காட்சி,
ஏழு வருடம் கழித்து,
அம்சவேணி
தியேட்டரில்....

எழுதியவர் : சதீஷ் (30-Jul-14, 12:49 pm)
பார்வை : 196

மேலே