சதியா விதியா பகுதி 1-2
குடைகளை மடக்கிய வண்ணம் அந்த துல்லியமான சிட்டி வெயிலில் , போனுக்கு ரீசார்ஜ் செய்யும் ஒரு கம்முநிகேசன் முன் கதவை தள்ளிக்கொண்டே உள்ளே நுழைத்தார்கள் செல்வியும் கவிதாவும் . "என்ன வேண்டும் போனுக்கு ரீஜார்ஜா ?" என்று கேக்க ! இல்லை பிரெண்டுக்கு "சிம் ஓன்று எடுக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே செல்வியின் முகத்தை பார்த்தால் கவிதா.
செல்வியும் தனது ஹெண்ட் பெகினுள் கையெய் விட்டவண்ணம் எவ்வளவுங்க என்று கேக்க ! "முதல்ல உங்க ஐ. டீ. கார்ட் இருக்கா ? இந்த போர்ம நிரப்பி இங்க சைன் பண்ணுக ! என்று சிம் கொள்வனவுக்கு தேவையான சாதாரண போர்மேல்டீஸ் எல்லாம் சுமூகமான முறையில் சொல்லிக்கொண்டே போக !
தனது ஹெண்ட் பெகினுள் கையெய் விட்டு தேடிய செல்வி , "ஐயோ ஐ. டீ. கார்ட் வீட்டுல விட்டுட்டு வந்துவிட்டேன் போலிருக்கு" என்று தனது பெகின் எல்லா பைகளையும் நுணுக்குப்பார்வை கொண்டு தேடி முடித்து, அந்த கடைக்காரர் முகத்தை முக கோணலோடு பார்த்தால் . !!!
ஐ. டீ. இல்லாம கொடுக்க முடியாதே ! "ரொம்ப பெரிய ப்ரொப்லெம் ஆகிடும்." வீடு பக்கத்துல இருக்கென்றால் இப்போ கொண்டு வந்து தர முடியுமா" ? என்று கேட்க , இல்லீங்க ! இவ யாழ்ப்பாணம் , யுத்த பீரியட்ல இங்க வந்து செட்லாகிடா ? நாங்க இருக்கிறது தேஹிவள, இரண்டு பஸ் மாரிபோகனும் , நாம ரெண்டு பெரும் வேல செய்றது "நோ லிமிட் ஷொப்ல" , இன்னிக்கி மட்டும்தான் எங்களுக்கு லீவு , ! ஒன்னும் பிரச்சின இல்லையென்றால் என்னுடைய ஐ. டீ. கார்ட் போட்டோ கொபி தரட்டுமா ? நான் என்றால் கொழும்புதான் , எங்க கார்டியன்ஸ் எல்லாம் கொழும்புல தான் இருக்கிறாங்க". என்று கவிதா தனது நண்பியின் முகவரியுடன் தனது இருப்பிடத்தையும் அரசல் புரசலாக ஒப்புவித்தாள்
ஓகே . அப்பெடிஎன்றால் நீங்க, சிம்ம ஒங்கட பேருக்கு எடுத்து உங்க பிரெண்டுக்கு ப்ரெசென்ட் பண்ணுக , சிம் ப்ளோக் ,சம்பந்தப்பட்ட எண்ணாமலும் பிரச்சின வரும்போது, ரெண்டு பெரும் ஒரே இடத்தில இருப்பதால் அதுபோன்ற பிரச்சினைய மிகவுல் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். ஆமா உங்களுக்கு என்னமாதிரியான சிம் தேவைப்படுது." என்ற உடன் செல்வியும் கவிதாவும் கண்களால் சாடையாக பேசிக்கொண்டு ஒரு புன்முறுவலுடன் இரேண்டுபேரும் ஒருமித்தே " மொபிடெல் சிம் குடுங்க ப்ளீஸ் (ஆவலுடன் ) !! கடைக்காரர் எதோ புரிந்தும் புரியாமலும் மனதிற்குள் சிரிக்க, ஒரே வார்த்தையில் என்ன பாய் பிரண்டா ? என்று சாதுவான குரலில் கேட்க ! செல்வி வெட்கத்தில் தலை குனிந்து சிரிப்பினை விழுங்க ! கவிதா மௌன சம்மதத்தை கடைக்காரரிடம் சாடையாக காட்டினாள்.
முன் பின் எல்லாம் தெரிந்தது "போல் இது எல்லாம் ஊருல நடக்காத தாங்க ? ஆனா ஒண்ணுங்க ! இப்பத்து பொண்ணுங்களெல்லாம் படு உசாருங்க" என்று கேளிக்கையாக கடைக்காரர் சொன்னபொழுது, கவிதா குறுக்கே மறுத்து "அப பசங்க மட்டும் சும்மாவா ? என்று நகைப்புடன் நையாண்டியாக வயது முப்பதை தாண்டிய அந்த கடைக்காரரிடம் சொன்னாள் ! உடனே அவரும் அதுவும் சரிதான் என சரி சமமாக பேச்சினை முடித்துக்கொண்டு.தொடர்ந்து ,
" ஆ ஒரு முக்கியமான விடயங்க ! இப்போ மொபிடெல் ப்ரீ பிட் (முட்கொடுப்பனவு )சிம்முல ஒரு புதிய பாசிளிடியீஸ் இருக்குங்க" ! செல்வியும் கவிதாவும் ஆவலுடன் என்ன அது ? 200 ரூபாவுக்கு மேல உங்க ரீசார்ஜ் இருக்கும்போது உங்களுக்கும் மற்ற மொபிடெல் சிம்முக்கும் ஆகக் குறைந்த கட்டணமே அறவிடப்படுகிறது . மேலும் நிறைய போட்டி பணப்பரிசெல்லாம் இருக்கு. முடிஞ்சா அத ட்ரை பண்ணுங்களேன்., கவிதாவை காட்டி உங்க பிரான்ட் நம்பரும் மொபிடலக இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும்."
உடனே செல்வி முந்தியடித்துக்கொண்டு ஓகே சிம் அக்டிவட் பண்ணி 200 க்கு மேல ரீலோட் செய்து தாங்க என்று முடித்தாள். சிம்முடைய வசதிகளையும் சொல்லிமுடித்த கடைக்காரர் கடைசியாக செல்வியே பார்த்து ஒரு அறிவித்தலையும் சொன்னார் " உங்களுக்கு வீக்டய்ஸ்ல ப்ரீ டைம் கேடச்சால் மொபிடெல் ஆபீசுக்கு உங்க பிரண்டோட போய் உங்க ஐ. டீ. கார்டுக்கு சிம்ம மாத்திகொல்லுங்க. எல்லாத்துக்கும் அது பெட்டெர் என்று நினைக்கிறேன். என்னென்றால் உங்க பிரண்டோட இது ஐந்தாவது சிம் கார்ட் அவக்கு வேறு மொபிடல் சிம் எடுக்கமுடியாது. அப்படியே தேவைப்படும்பொழுது உங்க சிம் கார்டினை கேன்சல் செய்ய முடியும். அனால் உங்களுக்கு மெச்செஜ் ஓன்று வரும் அதனை நீங்க அக்செப்ட் பண்ணனும். இல்லாம அவங்களுக்கு கேன்சல் செய்ய முடியாது. என்று சொல்லி முடித்தார்.
இப்படி கோர்வையாக நிபந்தனைகளை காதில் வங்கியும் வாங்காமலும் கடைக்காரரிடம் காசினை கொடுத்து விட்டு நடயெய் கேட்டினார்கள் செல்வியம் கவிதாவும்.
வாகன நெரிசலால் படு பிசியாக இருந்த கொழும்பு நெடுஞ்சாலை பாதையின் ஓரமாக சென்று கொண்டிருந்த கவிதாவும் செல்வியும் மக்டோனல்ட் சிற்றுண்டிக் கடயெய் கண்டவுடன் இருவரின் கால்களும் அதன் பக்கமே நகர்ந்து சென்றன. வாரத்துக்கு ஒரு முறை இரண்டு பெரும் இந்த வழமையான சிற்று உண்டிச்சாலைக்கு வந்து பணத்தை விரயமாக்குவது வழக்கம். அது போக பெண்களின் சுவாரஸ்யமான வழக்கங்களுக்கு இவர்கள் மட்டும் விதி விளக்குமல்ல. இரண்டு பர்கர்களையும் இரு குளிபானத்தையும் எடுத்துக்கொண்டு வழமையான சோபா போன்ற சீட்டினுள் அமர்தார்கள்.
இரண்டுபேரும் அமைதியாக பார்கரின் டிசுவை திறந்து இரண்டு கையினால் தம அழகான உதடுகள் மத்தியில் வைத்து ஒரு சின்னக் கடியுடன், அருகே இருந்த குளிர்பனத்தையும் ஒரு மிடல் எடுத்து விட்டு உடன மேசையில் டிசு துடைபானின் ஒன்றை எடுத்து தம உதட்டின் லிப்டிக் கரைகள் போகதவரு பார்த்து பார்த்து துடைத்து விட்டு , இருவரும் முகங்களை பார்த்து
ஒருவர்க்கொருவர் புன் முறுவலுடன் கதைக்க ஆரம்பித்தனர்.
செல்வி :தேங்க்ஸ் கவிதா .உன்னுடைய சிம் அக்டிவட்டுககு, அந்த கடைக்காரர்
சொன்னது போல உனக்கு எண்ணாமலும் ப்ரொப்லெம் என்றால் ஒரு
நாளைக்கி இரண்டு பேரும் லீவு போட்டுபோய் என்னுடைய
பேருக்கு மாத்திக்கலாம் . ஓகே வா ?
கவிதா : நீ வேற இதக்கெல்லாம் தேங்க்ஸ் பண்ணிக்கிட்டு , என்னுடைய அதிகமான சிம் கேநேக்சன் இருக்கிறதே எங்க அப்பட பேருக்கு. அவை இருந்த காலத்தில அவருக்கு தெரியாம நான் நெறைய சிம் எடுதிர்க்கிறேன் .. போலி நகைப்புடன்
செல்வி : வெடிச்சிரிப்புடன் . இருந்தாலும் அந்த கடைகாரருக்கு கொழுப்பு பாரு ! நம்ம போய்பிரண்டு கதை எல்லாம் அவருக்கு எதற்கு ? காசு குடுத்தா சாமான தராம ! வேட்டிபெச்சும் ரூல்சும் வேற ! (மோரைப்புடன் )
இப்படியே ஆனந்த கலந்துரையாடளுக்கு மத்தியில் கவிதா எழுந்து நின்று கண்சிமிட்டளுடன் தனது சுண்டு விரலை காட்டி தனது பாத்ரூம் அவசரத்தை வெளிப்படுத்தினால், புரிந்து கொண்ட செல்வி வெட்கப்புன்னகையுடன் அவள் வரும்வரை சிற்றுண்டியின் இறுதி கிரிகைகளை முடித்தாள். இதுபோன்ற தைரியமாக தமது காரியங்களை சாதிக்கும் கவிதாவை ஒரு கண்ணோட்டப் பார்வையாய் பின்னோக்கினால்
கவிதா எப்போதும் துரு துரு வென்று இருப்பவள் , அவளின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் அக்காலம் தொட்டே அவள் அம்மாவின் அப்பாவின் இருப்பிடம், கொழும்பாக இருந்தது. வீட்டுக்கு செல்லப்பிள்ளை என்பதால் நினைத்ததை சாதிக்கும் எண்ணம். வாழ்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் தலராதவள் . சுமார் 10 வருடத்துக்கு முன்னாள் இவங்களுக்கிட்டில்லாத பணமா என்ற அளவுக்கு , செல்வா சீமானாக இருந்தவர்கள் இவங்க அப்பாவும் அம்மாவும். இவர்களின் வாழ்கையிலும் ஒரு சோகக்கதை இல்லாமலில்லை. யுத்த அரக்கன் இலங்கயெய் பீடித்திருக்கும் தருவாயில் கொழும்பில் பல குண்டு வீச்சுகள். அதில் ஒரு குண்டு வீச்சு இவர்களின் சொத்துக்களையும் கவிதாவின் அம்மா அப்பாவையும் எடுத்து சென்றுவிட்டது . அதனால் கவிதா அநாதை ஆக்கப்பட்டதால் எப்படியாவது
தான் இருந்த நிலைமையை அடைய என்ன வேண்டுமானலும் செய்யத்தயார். என்ற முடிவிலே உள்ளவள். படிப்பும் அறிவும் இருப்பதால் இப்போது வேலை செய்யும் சொப்பில் கூட உயர்ந்த பதவியிலே உள்ளவள். அவளுக்கென்று இருப்பது அவளின் காதலன் மட்டுமே .அவள் போலவே சம்பாதிக்கணும் செட்லாகனும் என்ற வெறியுடன் இருக்கும் இவனுக்கும் ஆக மொத்தமாக இருவருக்கும் ஜோடிப்பொருத்தம் கச்சிதமாக பொருந்தியது.
எங்களது இந்த நட்பு மீடின் முடிந்தவுடன் பெரும்பாலும் லவ் மீடின் தான் என்று நினைகிறேன் என்ற நினைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தவாறே " என்னம்மா செல்வி என்ன இவ்வளவு யோச்சிக்கிற ? ஓவர் யோசனை ஒடம்பக்கு ஆகாதம்மா " என்று கிண்டலாக சொல்லியவாறே மேசைக்கு வந்து அமர்ந்தால் கவிதா .
குளிர் பானத்தின் இறுதி மிடரை குடித்து முடித்தவாறே , "சும்மாதான்" என்று புன்னகையுடன் " சாப்பிடு கவிதா நான் முடிச்சிட்டேன் " என்று சொன்னால் செல்வி, இறுதி மிச்ச மீதியெய் முடிக்கும் தருவாயில் செல்வி மொபிலில் தன் காதலனுடன் கடலை போட ஆரம்பித்தால்.
கவிதா செல்வியெய் உற்று நோக்கியவரே " பாவம் செல்வி யாழ்ப்பாண யுத்த நெருக்கடியின் பின்னர் வந்து, இங்கு தமது வாழ்கையின் முன்னேற்றபாதையில் இப்போ தான் கால் வெய்திருக்கிறாள்.அவளின் ஆசை எல்லாம் ஒரு நல்லதொரு குடும்ப வாழ்கை அமையனும். சந்தோசமாக வாழனும் என்பது மட்டுமே. வாழ்கையின் பெரிய இலட்சியங்கள் என்று சொல்ல ஒன்றுமில்லை. அவளுக்கு நண்பி என்று சொல்ல நான் மட்டுமே உள்ளேன். அவளுக்கு எல்லாம் அவள் காதலன்தான். காதலன் சொல்லுவதே அவளுக்கு வேத வாக்கு. அதற்காகவே இந்த சிம் கார்ட் மாற்றமும். என்று மனதில் நினைத்துக்கொண்டே குளிபானத்துடன் இச்சிந்தனயெய்யும் விழுங்கிக்கொண்டு கிளம்பினாள்.
ஆறு மாதம் கழிந்தது !!
திடீரென ஒரு நாள் , கண்ணீரும் கையுமா வந்து நின்றாள் செல்வி, என்ன ஏது என்று கவிதா விசாரிக்க ? முடிவில் செல்வியின் காதலுக்கு காதலன் வீட்டில் எதிர்ப்பலை கிளம்பி இருப்பதாகவும் , இரண்டு பெரும் ஓடிப்போய் திருமணம் சேய்யபோரதகவும் கூறினாள். நான் இன்று முதல் வேலைக்கு வரவில்லை எனவும் எனது ராஜினாமா கடிதத்தை பாஸ்சிடம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டாள். பின் என்னை மன்னித்து விடு கவிதா , என்னுடைய திருமணம் எப்படி நடக்கும் என்று எனக்கு தெரியாது . அதனால் ஒனக்குக் கூட அழைப்பு விடுக்க முடியாத நிலைமையில் நான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு , நான் போகிறேன் என்று நிமிடத்தில் என்னை தாண்டி சென்று விட்டாள். ஒன்றும் புரியாமல் திகைப்பில் ஒரு கணம் நான் என்னையே மறந்து மின்சாரம் தீண்டியவள் போல் ஆகிவிட்டேன். என்ன நடக்குது என்று புரியாமல் கண்களை மூடி ஒரு நிமிடத்தில் தன் நிலமிகி வந்தேன்.
என்ன கொடுமை இது ? ஏன் செல்வி இப்படி செய்தால் ? இப்படி பிரச்சினை இருப்பதாக இவ்வளவு நாளாக என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே ? என்று ஆயிரம் கேள்விகள் மனதிற்குள். என்னை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் மின்னல் வேகத்தில் வந்து என்னன்னவோ சொல்லிவிட்டு போகிறாளே . என்று தனக்குள் கவிதா புலம்பிக்கொண்டு உடனே செல்வியின் மொபிளுக்கு கோல் செய்தால். அந்த நம்பர் தற்கலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என ரெகார்டிங் ஓசை வந்தது. இவளுக்கு உதவ வேண்டுமே என்று சொல்லி தனது காதலனுக்கு கோல் செய்தாள். அவனின் நம்பரும் தற்கலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்தவுடன் . தன் காதலின் தங்குமிடம் தேடி அரை நாள் லீவில் சென்றால் கவிதா .
கவிதா அங்கு சென்றதும் இன்னும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தனது காதலின் நண்பரிடம் ஒரு லெட்டரை தவிர அங்கு அவனை காணவில்லை. (இப்படி அடிக்கடி இன்ப அதிர்ச்சி கொடுப்பது இவர்களின் காதல் வழக்கத்தில் இருப்பதால் கவிதாவுக்கு இது ஒன்றும் புதிதில்லை. ) கவிதா ஆர்வத்துடன் படிக்க , அதில் நான் வியாபாரம் விடயமாக வெளிநாடு போறேன் . வருவதற்கு 06 மாதங்கள் பிடிக்கும். என்னை மன்னித்து விடு. என்ன்டுடைய சிம்மஐயும் நிறுத்திட்டேன். அங்கு போனஉடன் கோல் செய்கிறேன். என்று காதல் வார்த்தையுடன் முடிவுற்று இருந்தது.
" இவனுக்கு வேலையே இதுதான். நேரம் காலம் தெரியாம பிசினஸ் வியாபாரம் என்று சுத்திகிட்டு இருப்பான். எங்கிட்ட ஒரு வார்த்த கூட சொல்ல தோணல்ல இவனுக்கு. என் ஐ. டி யிற்கு எடுத்த சிம்மஐயும் நிறுத்திவிட்டான். வரட்டும் வெச்சிக்கிறேன்"
"செல்வியும் ஏனோ தானோ என்று போய்விட்டாள். இரண்டு பெரும் என்னை கேட்காமலே தனது இஷ்டத்துக்கு முடிவு எடுதிர்க்கிறாங்க". என்று விரக்தியுடன் மனதில் திட்டிகொண்டிர்ந்தாள்.கவிதா .
இருந்தாலும் கவிதா எதிர் பார்த்துக்கொண்டிருந்த போன் கோல் ஆறு மாதமாகியும் வரவில்லை. கவிதாவும் தைரியசாலி என்பதால் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை . அவன் வந்தால் சந்திக்க வந்து தானே ஆகணும் என்று ஒரு குருட்டு வீம்புடன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருதாள்.
ஆறு மதங்களின் பின்
ஒருநாள். கவிதாவுக்கு விடுமுறை நாள். !
கொழும்பு நெடுஞ்சாலை பாதையின் ஓரமாக தனது ஷ்ப்பிங்கை முடித்து விட்டு அதே மcடொனல்ட் சிற்றுண்டிக் கடையில் வழமையான உணவுகளுடன் வழமையான இடத்தில் அமர்திருந்தாள் பாதையில் கண்களை வைத்தவண்ணம் கவிதா .
மcடொனல்ட் சிற்றுண்டி உணவகம் முன்னிலையில் பல வாகனங்கள் நிறுத்துவதும் போவதுமாக இருந்தது.
திடீர் என ஒரு கறுப்புக் கலர் அலியான்ஸ் கார் வந்து நின்றது. அதில் இருந்து ஏதோ தெரிந்த முகங்கள் சண்கிளாஸ் அணிந்த வண்ணம் வந்து இறங்கினார்கள். கொண்ஜெம் ஜூம் பண்ணி பார்த்தாள் . அதிர்ந்து போனாள். செல்வி அடம்பர உடையில். அதினருகே தன் கண்களை நம்ப முடியாத நிலைமையில் தன் காதலன். கோவத்தில் தன் முகம் விஸ்வரூபம் எடுக்க, "துரோகி" என்று சொல்லிக்கொண்டே ... தன் இருக்கையெய் ஆக்ரோசமாய்
பின்னால் தள்ளிவிட்டு தன்னிடமிருந்த குளிர் பான பாட்டிலை உடைத்து கையில் கொலை வெறியுடன் ஓடிவந்தாள் கவிதா ?? தொடரும்
.