என்னுயிர் நீயே

எனக்காக நீயும் உனக்காக நானும் காத்திருக்கும் காலம் காதலென்பதோ!
உன் மடியில் சாய்ந்து பேசாத போதும் பேசுகின்ற பாசம் காதலென்பதோ!
ஒரு நொடி உனை பிரிந்திட என் உயிர் கூட சுமையாகுதே!
சில நொடி உனை சுமந்திட என் வலிகளும் சுகமாகுதே!
மலரோடு உறவாடும் மணம் போலே;
என் உடலோடு உறவாடும் உயிர் நீயே!