மண்ணில் தவழும் என் மடிமீன் -போட்டிக் கவிதை-பொள்ளாச்சி அபி

மண்ணில் தவழும் என் மடி மீனே.,
கண்ணில் படுவதை கருத்தில் கொள்ளடா தேனே.!

விண்ணில் சொர்க்கம் இல்லையடா கண்ணே-ஏழை
கண்ணீரைத் துடைத்தால் நிற்குமடா அது முன்னே..!

குறளின் முப்பால் படித்து வளரணும் கண்ணே.,
குரலற்ற முப்பாலுக்கும் உழைத்து வாழணும் கண்ணே.!

நோயற்ற வளர்ச்சிக்கென நான் தரும் தாய்ப்பால்
நோயற்ற சமூகம் படைப்பாயென்ற நினைப்பால்..!

-பொள்ளாச்சி அபி--

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (1-Aug-14, 9:50 pm)
பார்வை : 464

மேலே