மண்ணில் தவழும் என் மடி மீன் -தாய்ப்பால் நாள் போட்டி - வினோதன்

மண்ணில் தவழும் என் மடி மீன்
விண்ணில் கமழும் விண்மீன் கண்டு தன்
கண்ணில் விருந்துப் புன்னகை பூண்டு யென்
புண்ணில் மருந்துபூச மடிந்து மாண்டதே மார்வலியும் !

பற்றிய வறுமையின் அகன்ற குடலுள் பறந்து
சுற்றிய என்பசி சுருண்டு படுக்க, கறுத்து
அழுகிய என்வலி அகப்பால் வற்றிய வலியாலல்ல
அழகிய பாலகனின் ஆறாப் பசிகண்ட தவிப்பால் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (1-Aug-14, 9:40 pm)
பார்வை : 192

மேலே