உயிரான அவள் காதல் போதுமடி 555

பெண்ணே...
வானத்தின் நீளம்
கதிரவனுக்குதான் சொந்தம்...
கடலுக்கு இல்லை...
நிலவின் வெளிச்சம்
பூமிக்குத்தான் சொந்தம்...
வானத்திற்கு இல்லை...
மலரின் வாசம்
தென்றலுக்குதான் சொந்தம்...
செடிக்கு இல்லை...
அவளுக்குத்தான்
சொந்தமானவன் நான்...
உனக்கு இல்லை...
உன் மனதில் நான் இருக்கிறேன்
என்கிறாய்...
உன் காதல்
நிரந்தரமில்லடி...
அவளை விட்டுவிட என்
மனம் வினாடி நினைத்தாலும்...
பல நிமிடம் மன்னிப்பு
கேட்கிறேனடி...
என் மனதிடம் நான்...
எப்போதும் என் விரல்
கோர்த்தே நடைபோடுதடி...
அவளின் நினைவுகள்...
உண்மை இல்லா உன்
காதல் வேண்டாமடி எனக்கு...
உயிரான அவள் காதல்
போதும் எனக்கு.....