விழி வாள்
இமை விளிம்பும்
ஆயுதம் சுமக்கின்றது;
எனைக் காயப் படுத்தும்,
உன் பார்வைக் கோணங்களை
வீழ்த்தி விட…
முடியவில்லை;
உடைவாளை
உத்திரத்தில் கட்டி விட்டு,
பூக்களை மட்டும்
பரிமாறிக் கொள்ளும்
ஆசையில்,
கரங்கள் சேர்ந்தேயிருக்கின்றன…

