என்ன மனசுடா இது

தான் செய்தால் தவறு எனும்,
பிறர் செய்தால் தப்பு எனும்!

தங்கை என்றால் தட்டி கேட்கும்,
மங்கை என்றால் மயங்கி நிக்கும்!

உதவி செய்ய ஆதாயம் பார்க்கும்,
உதவி மறுத்தால் காரி கக்கும்!

தவறு செய்ய ஊக்குவிக்கும்,
செய்த பின்னர் நொந்துநிர்க்கும்!

பேச சொல்லி எத்தனிக்கும்,
பேசும் முன் அகங்காரம் கொண்டு ஆட்டிபடைக்கும்!

இந்தனையும் செய்யும் உன்னை அறுவைசிகிச்சையில்
சரிசெய்ய நினைத்தேன்!
உன்னை மூலையிலும், இதயத்திலும் தேடி தேடி
தோல்வியை தான் சந்தித்தேன்!!

எழுதியவர் : அப்துல் பாஸித்.ச (4-Aug-14, 11:06 pm)
பார்வை : 1111

மேலே