சிற்பி

சிற்பி
---------
இறைவனும் ஒரு சிற்பிதான்...

பார்த்துப்பார்த்து
அழகு செய்து,
சிலை முற்றிலும்
முழுமையாய்
செதுக்கி முடித்ததும்...
தன் உளி கொண்டு
தானே ,
அந்த சிலைக்குள்
கண்ணுக்கு தெரியாத
இடத்தில்....
ஒரு சிறு
வெட்டு போட்டு
திருஷ்ட்டி கழிப்பது போல...

இறைவனும்...

மனக்குறையோ ,பணக்குறையோ
குணக்குறையோ,
ஆரோகியக்குறையோ,
உறவுசிக்கலோ...
என ஏதேனும் ஒன்றை
மனிதனுக்குள் வைத்தே படைக்கிறான்..

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்..

அவன் ஏமாந்திருக்கும்
நேரம் யாருக்கேனும்
விடுபட்டு போய் இருந்தால் ,
அவசரமாய் அவனுக்கு
அடுத்திருக்கும்
நெருங்கிய சொந்தத்திற்கு அதை
தாரை வார்த்து விடுகிறான்...

எல்லாம் போக,
தெரியாமல்
முழுமையாய்
யாரையேனும் படைத்தது விட்டாலோ
மிகவும் பிடித்து போய்
அவனிடமே அழைத்து
வைத்துக்கொள்கிறான்...

என்ன இறைவன் இவன்???

எழுதியவர் : சுதா கிரிதரன். (5-Aug-14, 11:25 am)
Tanglish : sirpi
பார்வை : 108

மேலே