Sudha - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sudha |
இடம் | : Muscat |
பிறந்த தேதி | : 29-Apr-1966 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 280 |
புள்ளி | : 48 |
சிறு வயதிலிருந்தே கவிதைகளில் களைப்பாற
விருப்பம்...
படம் பார்த்து உங்களுக்கு தெரிஞ்ச தத்துவத்தை சொல்லுங்க பிறருக்கு.......
ஒருவரின் சூழ்நிலையை புரிந்து கொள்வது
மனம் பொருத்ததா?
அப்போதைய மனநிலை பொருத்ததா?
புன்னகைப் பூச்சை
பூசிக்கொண்டதுமே
கண்ணீரில்
முகம் கழுவியது
மறைந்து போய் விடுகிறது
பல பெண்களுக்கு.!!!
புன்னகைப் பூச்சை
பூசிக்கொண்டதுமே
கண்ணீரில்
முகம் கழுவியது
மறைந்து போய் விடுகிறது
பல பெண்களுக்கு.!!!
சிற்பி
---------
இறைவனும் ஒரு சிற்பிதான்...
பார்த்துப்பார்த்து
அழகு செய்து,
சிலை முற்றிலும்
முழுமையாய்
செதுக்கி முடித்ததும்...
தன் உளி கொண்டு
தானே ,
அந்த சிலைக்குள்
கண்ணுக்கு தெரியாத
இடத்தில்....
ஒரு சிறு
வெட்டு போட்டு
திருஷ்ட்டி கழிப்பது போல...
இறைவனும்...
மனக்குறையோ ,பணக்குறையோ
குணக்குறையோ,
ஆரோகியக்குறையோ,
உறவுசிக்கலோ...
என ஏதேனும் ஒன்றை
மனிதனுக்குள் வைத்தே படைக்கிறான்..
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்..
அவன் ஏமாந்திருக்கும்
நேரம் யாருக்கேனும்
விடுபட்டு போய் இருந்தால் ,
அவசரமாய் அவனுக்கு
அடுத்திருக்கும்
நெருங்கிய சொந்தத்திற்கு அதை
தாரை வார்த்து விடுகி
இறை நிறுத்தி... ,
மெய் வருத்தி...
நோன்பு நோற்கும்
அணைத்து
நல் உள்ளங்களுக்கும்
ஆயுள் ஆரோக்கிய சௌக்கியத்தை
ஆண்டவன் அருள் புரியட்டும் ...
உலக தமிழர்கள் அனைவருக்கும்...
அவர்தம் குடும்பத்தாருக்கும்
புனித ரமலான் வாழ்த்துக்கள்.!!!
விழியோரம் விளிம்பில்
விழுந்து விடுவேனோ...
என பூத்து நிற்கும்
நீர்த்துளிகள்...
விழி இமைகளை
சிறகடித்து..
வந்த வலி /வழி
உள் வாங்கி
திருப்பி அனுப்புகிறேன்...
- மேஜர் முகுந்தின்
இறப்பை கூட உணராமல்
கையசைத்து விடை கொடுக்கும்
அந்த பிஞ்சு முகம் அர்ஷியாவை பார்த்து...
புல்லின் மகுடம்
பனி துளி என்றால்
மனிதனின்
மகுடம் எது.......?
......கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்...
கவிகள் எத்தனை பேர் அதே என் எண்ணத்தை
பிரதிபலிக்கிறார்கள் என காண விருப்பம்.