பா ஆ ஞானசேகர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பா ஆ ஞானசேகர்
இடம்:  கோயமுத்தூர்
பிறந்த தேதி :  20-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jul-2013
பார்த்தவர்கள்:  526
புள்ளி:  39

என்னைப் பற்றி...

சாதிக்க நினைப்பவன்..
கால வெள்ளத்தில் கரைந்து விடாதிருக்க
துடிப்பவன்..!

என் படைப்புகள்
பா ஆ ஞானசேகர் செய்திகள்
பா ஆ ஞானசேகர் - கன்னி தங்கமுருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2017 8:33 am

சிமெண்ட் என்பதற்கு சரியான தமிழ் பொருள் என்ன?

மேலும்

பெயர்களையெல்லாம் அப்படியே வைத்துக் கொள்ளலாம்; தவறில்லை. 09-Dec-2017 12:33 am
சிமெண்ட் என்பது அயல் நாட்டினரால் நம் நாட்டிற்கு வந்த ஒரு பொருளாகும். ஆனால் அதற்கு இணையாக நம் நாட்டிலேயே சுண்ணாம்பு, சாம்பல் மற்றும் ஓடக்கல் என்று சொல்லப்படும் கற்களை போடி செய்தும் கட்டிடம் கட்ட பயன்படுத்தினர். அவைகளை சுண்ணாம்பு சாந்து, சாம்பல் சாந்து, நிலக்கீழ் என்று பெயரிட்டு நம் முன்னோர்கள் அழைத்தனர். சிமெண்ட் என்பதற்கு சரியான தமிழ் பொருளை ஓரளவிற்கு கூறியிருக்கிறேன் என நினைக்கிறேன். 08-Dec-2017 9:57 am
சீமைக் காறை என அழைக்கப்படும் 08-Dec-2017 9:22 am

தயவு செய்து படிக்காதீர்கள்...

மேலும்

தமிழன்டா ...

மேலும்

பா ஆ ஞானசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2016 5:59 pm

கிறித்துமசு கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.

டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடு முகமாக நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி என்ற பண்டிகையை கொண்டாடினர்.

பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விக்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்....

( இயேசு கிறிஸ்து கொண்டாடச்சொல்லாத இந்த கிறிஸ்துமஸ் யார் தந்த பண்டிகை..? )

மேலும் படிக்க:
கிறித்துமசு - என்று type செய்து விக்கிபீடியா -வில் தமிழில் படிக்கவும்...

மேலும்

பா ஆ ஞானசேகர் - ஜெகன் ரா தி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2016 8:17 am

வாட்ஸ்அப்பில் வந்தது:

மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களே! 

நீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை  வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள்  MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு  செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத  ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள்.  ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .

ஆனால், நீங்கள் கேமராக்களை தவிர்த்து விட்டு கொஞ்சம் மனிதர்களைப் பார்த்திருந்தால் தமிழர்கள் யார் என்பதைப் புரிந்திருப்பீர்கள்.எங்கள் எதிர்கட்சித் தலைவர் அழுது வீங்கிய முகத்தோடு  சகாக்கள் சூழ அஞ்சலி செலுத்தி விட்டு முதலமைச்சரின் கையைப் பற்றிக் கொண்டார்.அது வெறும் கை குலுக்கல் அல்ல; அரை நூற்றாண்டு தொப்புள் கொடி உறவு.ஆட்டுக்கறிக்கு அடித்துக் கொண்டு கோழிக்கறிக்காக கூடிக் கொள்கிற பங்காளிகளின் பாரம்பரியம்

. எத்தனை ஊர்களில் அனைத்துக் கட்சி இரங்கல் கூட்டம்  நடைபெற்றது தெரியுமா?அரைக் கம்பத்தில் பறந்த திமுக கொடிகளைப் பார்த்திருந்தால் நீங்கள் ஆடிப் போயிருப்பீர்கள்.அழுகிற தொண்டனில் அவன், இவன் என்கிற பேதமே இல்லை. "அம்மா!நீங்கள் ஆளக்கூடாதென்றுதானே சொன்னேன். வாழக்கூடாதென்று சொல்லவில்லையே"என்று எங்கள் இரங்கற்பாக்கள் கூட  இதிகாசத் தரத்திலிருந்தன.

எங்களைத்தானே மாற்றுக் கட்சியை  மதிக்கத் தெரியாத திராவிடர்கள் என்று  அவமானம் செய்தீர்கள். நாடாளுமன்றத்தில் போலியாகக் கை கொடுத்து விட்டு "காங்கிரஸே இல்லாத  இந்தியா "பற்றிப் பேசுகிற பச்சோந்திகள் இல்லை நாங்கள்.  எதிரி  கூட முழுமையான வலிமையோடு இருக்க வேண்டும்  என்று ஆசைப்படுகிற புறநானூற்று வீரத்தின்  எச்சங்கள். நாங்கள் முட்டினாலும்,முத்தம் கொடுத்தாலும் அது நிஜமாய்தான் இருக்கும். நாங்கள் டிஜிட்டல் இந்தியர்கள் அல்ல .உணர்வுகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள். 

 ஏதோ கலவரம் நடக்கப் போவதைப் போல் துணை ராணுவத்தை இறக்கினீர்களே என்ன  ஆயிற்று? தமிழகம் எப்போதும் அமைதிப் பூங்காதான். எங்கள் தலைவர்கள் யாருமே கலவரங்களால் உருவானவர்கள் அல்லர். 
உங்கள் துணை ராணுவப்படையின் பசியையும், தாகத்தையும் உணர்ந்து அவர்களுக்கு பிஸ்கெட்டும், தண்ணீரும் தந்து கொண்டிருந்தானே ஒரு இஸ்லாமியச் சகோதரன் அவனையாவது பார்த்தீர்களா? இதற்குப் பெயர்தான் 'தமிழ்நாடு மாடல்' .நாங்கள்'  56 இன்ச் மார்பு கொண்ட குஜராத்திகள்' அல்ல.  இளகிய  இதயம் கொண்ட திராவிடர்கள்.'திராவிடக் கட்சிகளால்தான் தமிழ்நாடு சீரழிந்து விட்டது'என்கிற தேய்ந்து போன ரிக்கார்டை இனிமேலாவது கைபர், போலன் கணவாய்களில் போட்டுக் கொளுத்துங்கள்.

அப்புறம் மோடிஜி!கண்ணீரோடும்,கவலையோடும் நின்றிருந்த லட்சக்கணக்கான மக்களைப் பார்த்தீர்களா? அவர்கள் பிரியாணிக்காகவோ,100 ரூபாய்க்காகவோ கிளம்பி வந்தவர்கள் அல்ல.அவர்கள் வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியைத் தொட்டு விட்ட தலைவியின் முகம் காண தவித்து ஓடி வந்தவர்கள்.அவர்களைத்தான் நீங்கள் 'இலவச முட்டாள்கள்'என்று அவமானப்படுத்தினீர்கள்.முன்யோசனை இல்லாத உங்கள் திட்டத்தால் ஒரு மாதமாக தவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்.அவர்களின் தலைவியைத்தான் நீங்கள் சந்திக்க வந்திருக்கிறீர்கள்.   எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும் உங்களவர்கள் வெறுத்து ஒதுக்குகிற அரக்கர்களின் தலைவிதான் அவர். நவம்பர் எட்டாம் தேதி அவர் நாற்காலியில் இருந்திருந்தால் இங்கு நிகழ்ந்தது வேறானதாகவே இருந்திருக்கும்.

நாங்கள் சென்டிமென்டுக்கு அடிமையாகிற முட்டாள் தமிழர்கள்தான்.ஆனால்,  ஆளுமையும். அன்பும்  மிகுந்த தலைவர்களின் பின்னால் மட்டுமே அணிவகுப்போம்.அண்டாக்களை தூக்கி  பிரியாணி திருடுகிற குண்டர்களை தலைவர்களாக அல்ல;மனிதர்களாகக் கூட மதிக்க மாட்டோம். உங்களோடு
 தேசியகீதம் பாடுகிற போது மட்டுமே எங்களால் ஒன்றுபட முடியும்.எதையும் எதிர்பார்த்து இங்கு வராதீர்கள் .எங்களுக்கு பாணிபூரி கூட செய்ய வராது.

மேலும்

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 08-Dec-2016 4:18 pm
எதார்த்தமான சொற்கள் கொண்ட உண்மையான வரிகள் இவை.. மட்டுமல்ல ஆழ் மனதின் வலிகள் இவை .... இதை எழுதியவரின் பக்கத்தில் ஆதரவாக என்றும் நிற்கும் நம் தமிழ் நெஞ்சங்கள்... 08-Dec-2016 2:41 pm
கருத்திற்கு நன்றி 08-Dec-2016 11:19 am
தமிழன் தன்மானம் மிக்கவன், குட்ட குட்ட குனிகிறவனும் இல்லை, எட்டி அடிக்க ஏமாறுபவனும் அல்ல , விட்டுக்கொடுப்பதும் அவனே , தட்டிக் கேட்பதும் அவனே, இலட்சோப லட்சம் மக்களின் கண்ணீர் சொல்லும் கதைகள் ,தமிழனின் வலிமை ,வாழ்த்துக்கள் 08-Dec-2016 10:55 am
பா ஆ ஞானசேகர் - வியானி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2015 2:40 pm

என் பெயர் வியானி வித்யா, எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து வியானி என்ற என் பெயருக்கு அர்த்தம் தேடுகின்றேன் கிடைக்கவில்லை, நீங்கள் யாரவது தேடித் தந்து உதவுகின்றீர்களா?

மேலும்

உங்கள் பெயருக்கு நான் ஒரு சிறப்புப் பொருள் கூறுகிறேன் வியனி ==விய + நீ என்று பிரிக்கிறேன் விய ==வியப்படை ஆச்சரியப் படு , படுத்து வித்யா இவ்வுலகைப் பார்த்து விய நீ , வியந்து உன் வித்யாவால் அல்லது கல்வியால் கவிதையால் அறிவால் உலகை நீ வியக்கவை வியனீ க்கு வித்யா பாரதி அருளட்டும் வாழ்த்துக்கள் வியனி வித்யா அன்புடன், கவின் சாரலன் 18-Jul-2015 9:31 am
அருமை... மிக்க நன்றி தோழமையே... 17-Jul-2015 1:03 pm
வியானி என்ற பெயர் வியம் என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது என்று கருதுகிறேன். வியம் என்ற வார்த்தைக்கு ஆகாயம், அகலம், வியப்பு, சிறப்பு , ஈடு என்று பல பொருள்கள் உண்டு. வியானி வித்யா என்றால் 'சிறப்பான வித்தையைப் பெற்றவள்' என்று பொருள். கூடுதல் தகவல்; சூரியனுக்கு வியன்மணி என்று இன்னொரு பெயர் உண்டாம். 17-Jul-2015 10:58 am
மிக்க நன்றி தோழரே... 17-Jul-2015 9:43 am
பா ஆ ஞானசேகர் - கேள்வி (public) கேட்டுள்ளார்
09-Apr-2015 11:26 am

எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு இழப்பு.

மேலும்

பா ஆ ஞானசேகர் - விடுகதைகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2014 9:14 am

உரசி மோதி சிரசில் ஜோதி. – அது என்ன?

மேலும்

தீக்குச்சி..! சரியா..? 15-Dec-2014 9:45 am
பா ஆ ஞானசேகர் - பா ஆ ஞானசேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2014 4:32 pm

விமானத்தை தொடர்ந்து மலேசிய போர்க்கப்பல் மாயம்..!

மலேசியாவுக்கு மட்டும் ஏண்டா இந்த சோதனை..?

மேலும்

இது போன்ற சம்பவங்கள் மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது நண்பரே..! 08-Oct-2014 12:55 pm
ஹா ஹா ..........சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கருத்து அய்யா 07-Oct-2014 8:41 pm
மலேசிய விமானப் போக்குவரத்துக்கு சமீப காலமாக சிரம தசை போலும் நண்பரே ....... 07-Oct-2014 8:40 pm
பெர்முடா முக்கோணம் போல், அங்கேயும் ஏதும் பேய் முக்கோணம், வட்டம், சதுரம் இருக்கிறதோ என்னவோ? ... 07-Oct-2014 8:31 pm
பா ஆ ஞானசேகர் - அ வேளாங்கண்ணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 3:00 pm

நகைச்சுவை எண்ணங்கள் எண்: 17

மேலும்

பா ஆ ஞானசேகர் - அ வேளாங்கண்ணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 7:22 pm

நகைச்சுவை எண்ணங்கள் எண்: 33

மேலும்

பா ஆ ஞானசேகர் - அ வேளாங்கண்ணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 7:51 pm

நகைச்சுவை எண்ணங்கள் எண்: 43

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (71)

ஹரிணி

ஹரிணி

சென்னை
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (71)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (71)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

nuskymim

kattankudy

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே