ஹரிணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஹரிணி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 09-Jun-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 270 |
புள்ளி | : 16 |
கவிதை ரசிகை!!!
***முதியோர் இல்லத்தில் நான்***
உன்னை சுமந்த பத்து மாதத்தில் ஒரு கணம் கூட பாரமாய் இருந்ததில்லை!
ஆனால் இப்போது ஒவ்வொரு கணமும் பாரமாய் இருக்கின்றது!!!
என் கண்கள் வாசலையே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது -
என்றாவது ஒருநாள் என்னை திரும்ப அழைத்து செல்வாய் என்று!!
எனினும் மறவாதே- என் செல்வமகனே !!
உனக்கும் ஒருநாள் முதுமை காத்திருக்கிறது என்று!!!!
🚩வீர வணக்கம் !!!🚩
என் தாய் தந்த என்னை!!-
என் தாய் நாட்டிற்காக தந்தேன் என்னை !!!
ஜெய் ஹிந்த்!!!
தாய் வயிற்றில் நான் உணர்ந்த முதல் பிஞ்சு ஸ்பரிசமும் உனதே !!!
நான் கடைசியாக கண்மூடி மண் செல்லும் போது உடுத்தும் கோடித் துணியும் உனதே !!!
என் ஜனனம் முதல் மரணம் வரை என்றும் என் அண்ணனின் உறவு!!!!
கிறுக்கல்கள் இல்லாக்கவிதையா?
பிழை செய்து, பிழை செய்து திருத்திக்கொண்டேன் !!
இன்று பிழைத்துக்கொண்டேன் என் அழிவில்லாத் தமிழால்!!! - ஒரு கவிஞனாகி !!!!!
வாழ்க என் தமிழ்மொழி ! வளர்க என் தமிழ் இனம் !! வளர்கிறது என் தமிழ் வெறி (பற்று )!!!!
________________________________________
இப்படிக்கு - தமிழ் கவிஞன் !!!
நிலவின் காதல்!!
சூரியனே !
உன்னை காதலிக்கும் நிலவு உன்னிடம் தன் காதலை சொல்ல நேற்று மாலைப்பொழுதில் வந்தபோது -நீ மறைந்து போனதால் - இரவு முழுவதும் உன்னை தேடிக்கொண்டிருந்தது !!!!
காலையில் உன்னை கண்டதும் வெட்கப்பட்டு மறைந்து நிட்கிறது !!
நிலவே ! எப்போது சொல்வாய் உன் காதலை !!!!!!
மயில் இறகு இமைகள் !
மையிட்ட விழிகள் !
மயக்கும் பார்வைகள் !
தேன் கலந்த செவ்விதழ்கள்
தேன் சிந்தும் புன்னகைகள் !
தெவிட்டாத வார்த்தைகள்
திகட்டாத முத்தங்கள் !
ஆப்பிள் கன்னங்கள் -மிதமாய்
கடிக்க தோன்றும் என் எண்ணங்கள் !
செவ்விளநீரில் என் சிந்தை மயக்கங்கள் !
சிறு சிறு அரும்புகளாய் மலர் முகத்தின்
முகப்பருக்கள் !
சீறும் கோபப்பார்வை கணைகள் !
இன்னும் எத்தனையோ உனக்கென என் கவிதைகள் !
என் இன்னோர் உயிரே !!!
உன்னை பற்றிய புரிதல் - உன் சிரிப்பில் மட்டும் இல்லாமல் உன் சினத்தின் போதும் நான் புரிதல் வேண்டும்