நடிகன்டா நீ - நாகூர் கவி

வேசம் கலைந்த பின்னும்
மேடையில் கூத்தடிக்கும்
உன் கூத்து பெருங்கூத்து
ஒப்பாரி பாட்டினில் நீ தெருக்கூத்து...!

அரிதாரங்கள் பூசிப் பூசி - பல
அவதாரங்கள் எடுத்து வருகிறாய்...
தசாவதாரமும் உனக்கு சாதாரணம்
தறிக்கெட்ட நீ எப்போதும் சதா ரணம்...!

மானுடத்தில் சிறந்த மனிதன்
நான் தானென்று மார்தட்டுகிறாய்...
உள்ளும்புறமும் மிருகக்குணத்தை வளர்த்து
உனை மனிதனென்று நீயே சொல்லி அழைக்கிறாய்....!

இனத் துவேசங்களை துப்பி
இனவெறியோடு எச்சில் விழுங்குகிறாய்...
குரோதத்தோடு கும்மாளமிட்டு
குட்டிச்சாத்தன்போல குழப்பம் செய்கிறாய்...!

றிசானா நபீக்கிற்கு ஆறாக கடலாக
நீலிக்கண்ணீர் நீதானே வடித்தாய்...?
காஸாவின் கண்ணீர் கண்டு
கபோதி நீ ஏன் ஒளிந்தாய்...?

ஒற்றை உயிருக்கு நீ
ஒப்பாரி முகாரி பாடினாய்...
அதற்கு ஒரு சொல்லும் விடாமல்
அகராதியில் வார்த்தை தேடினாய்...!

பல்லுயிர் பலியாகும் பாலஸ்தீனத்திற்கு
பல்லிளித்து காட்டுகிறாய்...
பெண்மருதாணி கைப்பார்த்து இன்று
எழுத்தாணி தொலைத்து போனாய்...!

உன் மனிதத்தின் பற்றெல்லாம்
சாதி வெறியில் முக்குளிக்குதா....?
சாக்கடையின் நாற்றமெல்லாம்
சந்தனமாய் மணக்குதென உன்மூக்கு சொல்லுதா....?

கருப்புச் சட்டையணிந்த உன்னை
காவிக் கோவணம் காட்டிக்கொடுக்குதடா...
காழ்ப்புணர்ச்சி பருப்பு எப்போதும்
கவிதையினில் இனி வேகாதடா...!

எழுதியவர் : நாகூர் கவி (8-Aug-14, 12:09 am)
பார்வை : 512

மேலே