நட்பின் கற்பு

அடுத்த  பெண்களை  விட்டு அவமானப்படுத்தும்
கிரிமினல் தாடகை நட்பு....
நன்றி மறந்து கத்திக் குதறி
நைய்யப்புடைக்கும் நட்பு...
நைசாய் பேசி சைசாய் உறவாடி
கேவலமாய் எழுதும் நட்பு...
பாசத்திற்கு அடிமை போல் பழகி
பாசாங்காய் பேசாமலேயே போன நட்பு...
பிரச்சனைக்குக் காரணமானாலும்
தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் பறந்த நட்பு...
பரிதவித்துக் கெஞ்சும் போது
உதவி வாங்கி உதை கொடுக்கும் நட்பு...
குண்டப்பன் எட்டப்பனாகி நின்று
எம கதாயுதத்தை தூக்கும் நட்பு...
ஏதோ காரணம் காட்டி விலகிப் போகும்
அண்ணன் தங்கை நட்பு...
செய்த வினயம் வெளியில் வருமோ என்று பயந்து
நல்ல பிள்ளையாய் பழி சொல்லும் நட்பு ...
கூட்டத்தோடு கோவிந்தா போட வேண்டும் என்று
கோபமில்லாமல் காலி பண்ணும் நட்பு ...
நட்பிற்கு கற்பு எங்கே ?

எழுதியவர் : aadhee (7-Aug-14, 11:11 am)
பார்வை : 428

மேலே