தாயே உனக்கு ஈடேது

தாயே உனக்கு ஈடேது
பத்துத்திங்கள் கருவினில் சுமந்தாய்
பித்தமயக்கத்தில் எனைநீ காத்தாய்
பத்துமாதமும் முக்கால்பசி ஏற்றாய் சொத்தே நானென்று தூங்காமல்பார்த்தாய்!

உன்உயிர் கொடுத்து எனைவளர்த்தாயே
உன்உதிரம்சிந்திஎனக்குஉயிர்கொடுத்தாயே
பட்டினியாய் நீயும்பலநால் கிடந்தாயே
தொட்டினில் நானும் சுகமாய்தூங்க!

பேசாதஎன்னிடம் பேசியே மகிழ்ந்தாய்
கூசும்உருப்பு தொட்டுகொஞ்சியேசிரித்தாய்
உன்மொத்தமுத்தத்தையும்எனக்கேதந்தாய்
எனஅசிங்கத்த நீயும்அள்ளியேமகிழ்ந்தாய்!


கைநாட்டுவரைதான் உ படிப்பென்றாலும்
கல்லூரிவரையில் என படிக்கவைதாய்
சொத்தே வாழவென்று பலர்வாழ்ந்தாலும்
சொத்துதான்கல்வியெனஎனக்கெடுத்துரைததாய்










உன்காலில் செருப்பில்லாமல் நீவாழ்ந்தாலும்
என்காலுக்கு புதுசெருப்பு போட்டுநீமகிழ்ந்தாய்
கிழிந்தசேலைத்தான் உன்உடை என்றாலும்
புதுசட்டை போட்டுஎனக்கழகு பார்த்தாய்

தங்கமே முத்தென்று சீராட்டி வாழ்ந்தாய்
தாய்தந்தையேதெய்வமென சொல்லியேவளர்த்தாய்
உழைப்புதான் வாழவின் உயிர்நாடி என்றாய்
உழைப்பில்லா வாழ்க்கை ஊனமாகுமென்றாய்

என்கால்கள் வலிக்குமென்று உன்தோலில்சுமந்தாய்
என்உடல் சுடும்போது நீதாங்காமல் துடித்தாய்
என்வயிர் மந்தமானபோதுஉன்வயிர்சுரிக்கினாய்
என்கண்கள் தூங்க ஆராரோ பாடினாய்

தமிழே அமிழ்தென சொன்னாய்
திருக்குறளே வாழவின் அறநெறி என்றாய்
அரிச்சந்திரா லவகுசா நாடகம் காட்டினாய்
அன்பையே உணவாய் ஊட்டிநாய்








என்உடல் பெருக்க உன்உடல் சிறுத்தது
என்வாழ்வு செழிக்க உன்உடம்பு இளைத்தது
நீதந்தபாலால் என்உயிர் பிழைத்தது
நான்தந்தபாலால் உன்உயிர் பிரிந்தது


காலமெல்லாம் பேசினாய் என்னோடு
கடைசியாய் பேசினாய் எமனோடு
உனைபார்க்க இனிமேல் முடியாது
எனைவளர்த்த தாயே உனக்கு ஈடேது

எழுதியவர் : (9-Aug-14, 10:21 pm)
பார்வை : 77

மேலே